50% ஊதிய குறைப்புக்கு எஸ்ஐஏ விமானிகள் ஒப்புதல்; வேலைகளைத் தக்கவைக்க விருப்பம்

ஊதி­யத்­தை­விட வேலை­யில் நீடிப்­பதே முக்­கி­யம் எனக் கருதி, தங்­க­ளது ஊதி­யத்தை 50% வரை குறைத்­துக்­கொள்ள சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) விமா­னி­கள் ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர்.

அவர்­க­ளது ஊதி­யத்­தின் ‘எம்­விசி’ விகிதத்தில் ஏற்­கெ­னவே 10% குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­யப்­படு­கிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.

எஸ்­ஐஏ நிறு­வ­னத்­திற்­கும் சிங்­கப்­பூர் விமா­னி­கள் சங்­கத்­திற்­கும் (ஆல்ஃபா-எஸ்) இடையே எட்­டப்­பட்­டுள்ள புதிய உடன்­பாட்­டின்­படி, மீண்­டும் பணி­யில் அமர்த்­தப்­பட்ட விமா­னி­க­ளின் ஊதி­யத்­தில் 60 விழுக்­கா­டும் ‘ஃபர்ஸ்ட் ஆஃபிசர்’ எனும் முதல்­நிலை விமா­னி­க­ளின் ஊதி­யத்­தில் 50 விழுக்­கா­டும் குறைக்­கப்­படும். இதில் 10% ‘எம்­விசி’ குறைப்­பும் உள்­ள­டங்­கும்.

இந்த ஊதி­யக் குறைப்பு அடுத்த மாதம் 1ஆம் தேதி­யில் இருந்து 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நடை­மு­றை­யில் இருக்­கும் என்று விமா­னி­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட உள்­சுற்­ற­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மற்ற விமா­னி­க­ளுக்கு 28.5% வரை­யும் முதல்­நிலை விமா­னி­க­ளுக்கு 18.5% வரை­யும் ஊதி­யக் குறைப்பு இருக்­கும் என்­றும் அவ்­வி­கி­தம் அவர்­க­ளின் தற்­போ­தைய ஊதி­யத்­தின் அடிப்­ப­டை­யில் இருக்­கும் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

வானில் பறக்­கும் நேரம் அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில் விமா­னி­க­ளின் ஊதி­யக் குறைப்பு மறு­ஆய்வு செய்­யப்­பட்டு, சரிக்­கட்­டப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கை­ய­தோர் உடன்­பாடு எட்­டப்­பட்­டதை எஸ்­ஐஏ நிறு­வ­னப் பேச்­சா­ள­ரும் உறு­தி­செய்­தார்.

“இன்­றைய (நேற்­றைய) உடன்­பாட்­டின்­படி, எஞ்­சி­யுள்ள அனைத்து சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் மற்­றும் சில்க்­ஏர் விமா­னி­க­ளுக்­கும் வரும் அக்­டோ­பர் 1ஆம் தேதி­யில் இருந்து ஊதி­யக் குறைப்பு நட­வ­டிக்கை அமல்­ப­டுத்­தப்­படும். எங்­க­ளின் விமா­னி­கள் மேலும் வேலை­யி­ழக்­கா­மல் தடுக்க இந்த உடன்­பாடு உத­வி­பு­ரிந்­துள்­ளது,” என்று அந்­தப் பேச்­சா­ளர் சொன்­னார்.

அத்­து­டன், இப்­போ­தைய மிக­வும் நிச்­ச­ய­மில்­லாச் சூழல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள சவால்­களில் இருந்து மீண்டு வரு­வதே எஸ்­ஐஏ குழு­மத்­தின் இலக்கு என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அக்­கு­ழு­மத்­தைச் சேர்ந்த 2,600 விமா­னி­களில் கிட்­டத்­தட்ட 50 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர்­களில் பெரும்­பா­லா­னோர் வெளி­நாட்­ட­வர்­கள் என்­றும் அறி­யப்­ப­டு­கிறது.

இந்த நிதி­யாண்­டிற்­குள் 50% கொள்­ள­ள­வு­டன் இயங்க முடி­யும் என எதிர்­பார்ப்­ப­தாக எஸ்­ஐஏ குழு­மம் தெரி­வித்­துள்­ளது.

இப்­போ­தைக்கு, எட்டு விழுக்­காடு பய­ணி­கள் கொள்­ள­ள­வு­டன் அக்­கு­ழு­மம் விமா­னங்­களை இயக்கி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!