பொதுச் சுகாதாரத்தைப் பேண கடும் சட்டங்கள் அவசியம்

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 95 விழுக்காட்டினர் கருத்து

குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், உண­வ­கங்­கள், கடைத்­தொ­கு­தி­கள் போன்ற இடங்­களில் பொதுச் சுகா­தா­ரத்­தைப் பேண கடு­மை­யான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த சிங்­கப்­பூர்­வா­சி­களில் கிட்­டத்­தட்ட 95 விழுக்­காட்­டி­னர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் மூன்­றாம் முறை­யாக மேற்­கொண்ட பொதுத் தூய்மை மன­நி­றைவு கருத்­தாய்வு மூலம் இது தெரி­ய­வந்­துள்­ளது. 21 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட 1,716 சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் பங்­கேற்ற அந்­தக் கருத்­தாய்வு முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

கடந்த டிசம்­பர் மாதத்­தில் இருந்து இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடை­மு­றைக்கு வரு­முன் இந்­தக் கருத்­தாய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் பொதுத் தூய்மை, சுகா­தா­ரம் பற்றி ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­க­ளி­டம் கருத்து கேட்­கப்­பட்­டது.

இதற்­கு­முன், கடந்த 2016 அக்­டோ­பர் முதல் 2017 மார்ச் வரை­யிலும் 2018 ஆகஸ்ட் முதல் டிசம்­பர் வரை­யி­லும் இரு­முறை இத்­த­கைய கருத்­தாய்­வு­கள் இடம்பெற்றன.

பல­ரும் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டிய பொது இடங்­களில் கடு­மை­யான சுகா­தா­ரத் தர­நி­லை­க­ளுக்­கான சட்­டங்­கள் தேவை என்று 97 விழுக்­காட்­டி­னர் ஒத்­துக்­கொண்­ட­னர். கட்­ட­டங்­களில் பொதுச் சுகா­தா­ரத்­திற்கு கட்­ட­டத்தை நிர்­வ­கிப்­ப­வர்­களே பொறுப்­பேற்க வேண்­டும் என அவர்­கள் விருப்­பம் தெரி­வித்­த­னர்.

பொதுத் தூய்­மை­யைப் பொறுத்­த­வரை, முந்­தைய ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் மன­நி­றைவு அதி­க­மாக இருப்­ப­தைக் கருத்­தாய்வு முடி­வு­கள் காட்­டின.

அண்­மை­யில் தாங்­கள் சென்ற இடங்­களில் பேணப்­படும் பொதுத் தூய்மை குறித்து மன­நி­றைவு கொள்­வ­தாக கிட்­டத்­தட்ட 93 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர். 2018ஆம் ஆண்­டில் இந்த விகி­தம் எட்டு விழுக்­கா­டாக இருந்­தது.

கொவிட்-19 நோய்ப் பர­வலை அடுத்து தூய்­மைப் பணி­களை முடுக்­கி­விட்­டது மன­நி­றைவு அதி­க­ரிப்­புக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.

“கொரோனா ஏற்­ப­டுத்­திய எதிர்­மறை விளை­வு­களை நாம் அனை­வரும் காண்­கி­றோம். அதே வேளை­யில், அவ­ச­ர­மாக நாம் செய்­யாத சில விஷ­யங்­க­ளைச் செய்­வ­தற்­கான வாய்ப்­பு­களை அந்­நோய்ப் பர­வல் ஏற்­ப­டுத்­தித் தந்­துள்­ளது. இந்த நேரத்­தில், பொதுச் சுகா­தா­ரத்­தில் கவ­னம் செலுத்த வேண்­டி­யது பொருத்­த­மான ஒன்று. இப்­போது நமக்­குக் கிடைத்­துள்ள வாய்ப்­பு­களைச் சாத­க­மாக்­கிக் கொண்­டோம் எனில், நீடித்து நிலைக்­கத்தக்க வகை­யில் நாம் நடந்­து­கொள்­ளும் விதத்­தை­யும் மாற்­றிக்­கொள்ள அதிக வாய்ப்­புள்­ள­தா­கக் கரு­து­கிறேன்,” என்­றார் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சமூ­க­வி­யல் (பயிற்சி) பேரா­சி­ரி­யர் பௌலின் டே ஸ்ட்­ரா­கன்.

ஒட்­டு­மொத்த மன­நி­றைவு அதி­கரித்து இருந்­தா­லும், உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக்­க­டை­களி­லும் துப்­பு­ர­வுப் பணி­களின் முழு­மைத்­தன்மை போது­மான அள­விற்கு இல்லை என்று 23 விழுக்­காட்­டி­னர் கூறி­யுள்­ள­னர்.

உண்­மை­யில், தூய்­மைப் பணி­களின் செயல்­தி­றத்­தா­லேயே சிங்­கப்­பூர் சுத்­த­மா­கக் காட்­சி­ய­ளிக்­கிறது என 87 விழுக்­காட்­டி­னர் ஒத்­துக்­கொண்­ட­னர்.

தூய்மை விவ­கா­ரங்­களில் வெற்­றி­க­ர­மா­கத் திக­ழும் அக்­கம்­பக்­கக் குழுக்­களில் தொண்­டூ­ழி­யம் செய்­வீர்­களா என்ற கேள்­விக்கு, பாதிப் பேர் மட்­டுமே விருப்­பம் தெரி­வித்­த­னர்.

துப்­பு­ர­வுப் பணி­க­ளைப் பொறுத்­த­மட்­டில், பல்­வேறு இடங்­களில் முழு­மை­யான அள­வில் அவை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கப் பெரும்­பா­லா­னோர் தெரி­வித்­த­னர். ஆயி­னும், எம்­ஆர்டி, எல்­ஆர்டி நிலை­யங்­களில் துப்­பு­ர­வுப் பணி­க­ளின் முழு­மைத்­தன்மை அள­வுக்கு அதி­க­மாக உள்­ளது என்று 12 விழுக்­காட்­டி­னர் கருத்­து­ரைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!