கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் டன்லப் ஸ்திரீட் ஹனிபா கடை

தங்களுக்குக் கிருமித்தொற்று இருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னர் கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலை சுகாதார அமைச்சு தினமும் வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலில் 118, டன்லோப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ஹனிபா பிரைவட் லிமிடெட் சேர்க்கப்பட்டுள்ளது.

சமூகத்தொற்று தொடர்பாக அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 நோயாளி, இம்மாதம் 7ஆம் தேதியன்று முற்பகல் 11.05 மணிக்கும் 11.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

புக்கிட் தீமா சாலையிலுள்ள தேக்கா நிலையத்திற்கு செப்டம்பர் 9ஆம் தேதியன்று பகல் 12.25 மணிக்கும் 1 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொவிட்-19 நோயாளி சென்றிருந்தார் என்பது முன்னரே உறுதியான தகவல். இப்போது தேக்காவின் மற்றொரு இடமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோயாளிகள் தொற்றைப் பரப்பக்கூடிய நிலையில் இருந்தபோது குறைந்தது 30 நிமிடங்களுக்கு இருந்த இடங்களை அமைச்சு இந்த பட்டியலில் சேர்த்து வருகிறது.
மேலும் கிருமி தொற்றியவர்கள் எத்தனை முறை இந்த இடங்களுக்குச் சென்றனர் என்ற தகவலையும் திரட்டி வருகிறது.

இதன்வழி பட்டியலில் உள்ள இடங்களுக்குக் குறிப்பிட்ட அந்த நாளிலும் நேரத்திலும் சென்றவர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குத் தங்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!