கொவிட்-19: நேற்று உறுதிசெய்யப்பட்ட 22 வயது சிங்கப்பூரருக்கு எப்படி தொற்றியது என்று தெரியவில்லை

1 mins read
22bba848-ed8f-4e8b-8e3d-efec344d6234
-

நேற்று உறுதிசெய்யப்பட்ட 15 கொவிட்-19 நோயாளிகளில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர் என்றும் அவர் 22 வயது சிங்கப்பூரர் என்றும் தெரிய வந்துள்ளது. இவருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பதற்கான தகவல் இன்னும் அறியப்படவில்லை.

மேலும், சனிக்கிழமை பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கு, சிங்கப்பூர் வந்த பிறகு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஐவரும் ஈரான் மற்றும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இம்மாதம் 6ஆம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் இவர்கள் சிங்கப்பூருக்கு வந்தார்கள். எஞ்சிய ஒன்பது கொவிட்-19 நோயாளிகளும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.