இன்ஸ்டகிராமில் ஆபாச காணொளிகளை பதிவேற்றம் செய்த ஆடவருக்கு அபராதம்

இன்ஸ்டகிராமில் ஆபாச காணொளிகளை பதிவேற்றம் செய்த ஆடவருக்கு அபராதம்

1 mins read
92e69973-a696-4822-874c-57a292965a29
லிம் வெய் மிங். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

பொது இடத்தில் கால் சட்டை ஒன்றைப் பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்ட ஆடவர், அந்தக் கால் சட்டையைப் படம் எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக 38 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்தன.

இச்செயலுக்காக லிம் வெய் மிங்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை 2,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததற்காக பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்ததன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் தனது கைபேசியில் நான்கு ஆபாச காணொளிகளை வைத்திருந்ததன் தொடர்பில் மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

பெண்களின் உள்ளாடைகளை அவர் நுகர்வதைக் காட்டும் காணொளியை அவரே இணையத்தில் பதிவேற்றம் செய்ததும் மற்றொருவருக்கு ஆபாச காணொளிகளை அனுப்பியதும் கருத்தில் கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி லிம் கைது செய்யப்பட்டார்.