‘என்யுஎஸ்’, ‘மோனாஷ்’ பல்கலைக்கழகங்கள் இணைந்து கொவிட்-19 தடுப்பூசி முயற்சி

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இணைந்து கொவிட்-19 தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அது அடுத்த ஆண்டு இறுதியில் மருத்துவப் பரிசோதனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோய் மருந்திலிருந்து சற்று மாற்றியமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி விலங்குகளிடம் சோதிக்கப் பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியை சிங்கப்பூரிலும் ஆஸ்திரே லியாவிலும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Clec9A-RBD எனும் பெயரிடப்பட்டுள்ள இது, கொரோனா கிருமி தொடர்பில் சிங்கப்பூர் பங்கேற்கும் மூன்றாவது தடுப்பூசி தயாரிப்பு முயற்சியாகும். தங்கள் ஆராய்ச்சியை மேலும் விரிவாக்க, இரு நாட்டு ஆய்வாளர்கள் அடுத்த சில மாதங்களில் தங்கள் நாட்டு சுகாதார அமைச்சிடமிருந்து, கூடுதல் நிதிக்கும் ஒப்பு தலுக்கும் விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!