பணிப்பெண் கொலைக்குற்றவாளி என்ற தீர்ப்பு ரத்து: ஆயுள் தண்டனையைத் தவிர்க்க முயற்சி

பணிப்பெண் கொலைக்குற்றவாளி என்ற தீர்ப்பு ரத்து: ஆயுள் தண்டனையைத் தவிர்க்க முயற்சி

2 mins read
92687ef4-b806-46e8-b1fc-2c296c9f14db
இந்தோனீசிய பணிப்பெண் 2016 ஜூன் 7ஆம் தேதி திருவாட்டி சியோவ் கிம் சூ என்ற மாதைக் கொலை செய்தார். அந்தச் சம்பவம் தெலுக் குரோவில் இருக்கும் திருவாட்டி சியூவுக்கு செந்தமான இந்த வீட்டில் தான் நிகழ்ந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்த்து வந்த இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த தர்­யாத்தி, 28, என்ற வீட்டு வேலை பணிப்­பெண், 2016 ஜூன் 7ஆம் தேதி திரு­வாட்டி சியோவ் கிம் சூ என்ற தன்­னு­டைய 59 வயது முத­லா­ளியை தெலுக் குரோ­வில் இருக்­கும் முதலாளியின் வீட்­டில் பல­முறை கத்­தி­யால் குத்தி, வெட்­டி­விட்­டார்.

இத­னால் அந்த மாதின் உட­லில் 90க்கும் அதிக கத்திக்குத்து காயங்­கள் ஏற்­பட்­டன. அவர் மாண்டு­விட்­டார். பணிப்­பெண் மீது கட்­டாய மரண தண்­டனை விதிக்­கத்­தக்க கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. விசா­ரணை சென்ற ஆண்டு ஏப்­ரல் 23 முதல் இந்த ஆண்டு மார்ச் 4 வரை நடந்­தது.

இந்­நி­லை­யில், ஆயுள் தண்­டனை அல்­லது மரண தண்­டனை விதிக்­கக்­கூ­டிய அள­வுக்குக் கொலைக் குற்­றச்­சாட்டை அர­சி­னர் தரப்பு குறைத்­தது. அதே­வே­ளை­யில், மரண தண்­டனை விதிக்­கும்­படி நீதி­மன்­றத்தைத் தான் கேட்­கப்­போ­வ­தில்லை என்­றும் அர­சி­னர் தரப்பு கூறி­விட்­டது.

திரு­வாட்டி சியோ­வின் கண­வ­ரான திரு ஓங் தியாம் சூன், என்­பவரைக் கொலை செய்ய முயன்­ற­தா­கக் கூறும் இரண்­டா­வது குற்றச்­சாட்­டை­யும் அந்­தப் பணிப்­பெண் எதிர்­நோக்­கு­கி­றார்.

ஆனால் இந்தக் குற்­றச்­சாட்டு கைவி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், பணிப்­பெண் சார்­பில் முன்­னி­லை­யா­கும் முகம்­மது முஸா­மில் முகம்­மது என்ற வழக்­கறி­ஞர், தண்­ட­னையைக் குறைக்கும் படி கேட்டு வாதா­டு­வ­தற்குத் தோதாக வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு இருக்­கிறது.

தன்­னு­டைய கட்­சிக்­கா­ரர், ஆயுள்­தண்­ட­னையைத் தவிர்த்­துக்­கொள்ள முடி­யும் என்ற நம்­பிக்­கை­யில் மனோ­வி­யல் சாட்­சி­யத்தை அடிப்­ப­டை­யாக வைத்து வாதிட விரும்­பு­வ­தாக வழக்­க­றி­ஞர் தெரி­வித்­துள்­ளார்.

உயர் நீதி­மன்­றம் இதற்­கான மனுவை நேற்று அனு­ம­தித்­தது. கொலை­க்குற்­றச்­சாட்­டின் பேரில் குற்­ற­வாளி என்று வெளி­யான தீர்ப்பு ரத்து செய்­யப்­பட்டு உள்­ளது. விசாரணை தொடர்ந்து நடக்­கும்.