சுடச் சுடச் செய்திகள்

சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை: கண்காணிப்பு வளையத்தில் சில வங்கிகள்

சிங்­கப்­பூ­ரில் உள்ள வங்­கி­கள் சில­வற்­றில் சந்­தே­கத்­துக்கு இட­மான விதத்­தில் பணப் பரி­வர்த்­தனை நடந்­துள்­ள­தாக அமெ­ரிக்­கா­வில் உள்ள நிதி தொடர்­பான குற்­றத் தடுப்பு அம­லாக்க அமைப்பு கூறி உள்­ளது.

இதில் கடந்த 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து 2017ஆம் ஆண்­டு ­வரை சிங்­கப்­பூ­ரி­லுள்ள டிபி­எஸ், சிஐ­எம்பி, டாய்ச் வங்­கி­களில் அமெ­ரிக்க டாலர் 4.5 பில்­லி­யன் அள­வுக்கு சந்­தே­கப்­ப­டும்­ப­டி­யான பணப் பரி­வர்த்­த­னை­கள் நிகழ்ந்­துள்­ள­தாக அது கூறு­கிறது.

அத்­து­டன், 20 ஆண்­டு­கா­லத்­தில் சிங்­கப்­பூ­ரில் 1,781 சந்­தே­கத்­திற்­கி­ட­மான பணப் பரி­வர்த்­த­னை­களில் அமெ­ரிக்க டாலர் 3 பில்­லி­யன் பெற்­றுள்­ள­து­டன் சிங்­கப்­பூ­ரில் இ­ருந்து அமெ­ரிக்க டாலர் 1.5 பில்­லி­யன் வெளி­யே­றி­யுள்­ள­தாகவும் அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது பற்­றி தான் அறிந்­துள்­ள­தா­கக் கூறும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், இது­போன்ற சந்­தே­கத்திற்கிடமான பணப் பரி­வர்த்­தனை­கள் சட்­ட­வி­ரோத பரி­வர்த்­தனை­க­ளா­கக் கொள்ள முடி­யாது என்­ற­போ­தி­லும் இதன் தொடர்­பான பத்­தி­ரிகை செய்­தி­களைத் தான் கடு­மை­யாக கரு­து­வ­தாக ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

இதில், கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றும் நட­வ­டிக்கை

களுக்கு எதி­ராக ‘ஃபைனான்­ஷியல் டாஸ்க்­ஃபோர்ஸ்’ எனப்­படும் நிதி நட­வ­டிக்­கைக்­கான அம­லாக்க பிரிவு ஏற்­ப­டுத்­தி­யுள்ள அைனத்­துலகத் தர­நி­லை­க­ளுக்­கு ஏற்ப சிங்­கப்­பூ­ரின் ஒழுங்­கு­முறை கட்­ட­மைப்பு உள்­ள­தாக ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் சொல்­கி­றார்.

“ஊட­கங்­களில் இது­போல் வரும் செய்­தி­க­ளைக் கவ­ன­மாக பரி­சீலித்து வரும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், எங்­க­ளு­டைய ஆய்­வின் அடிப்­ப­டை­யில் தகுந்த நட­வடிக்கை எடுக்­கும்,” என்று அந்தப் ­பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

சந்­தே­கத்­திற்­கி­ட­மான பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான அறிக்­கை­ளில் தவறு நிகழ்ந்­துள்­ளது என அர்த்­த­மா­காது என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

மேலும், இது பற்றி ஒழுங்­கு­முறைக் கண்­கா­ணிப்­பா­ளர்­கள் மேல் நட­வ­டிக்கை எடுக்க ஏது­வாக வங்கி­கள் இவற்றை அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்குக் கொண்டு செல்ல வேண்­டிய கடமை உள்­ளது என்­பதை அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

எடுத்துக்காட்டாக, சிறிய அள­வி­லான பணப் பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெ­றும் ஒரு வங்­கிக் கணக்­கிற்கு ஒரு பெரிய தொகை வரு­மா­னால், அது அந்த வங்­கி­யின் கண்­கா­ணிப்பு வளை­யத்­தில் வரும். இதே­போல், ஒரு­வர் தனது கணக்­கில் ஒரு மில்­லி­யன் டாலர் வைத்­தி­ருந்து அதை முழு­வ­து­மாக வேறொ­ரு­வ­ரின் கணக்கிற்கு மாற்­றி­னா­லும், அது சந்­தே­கத்­தைக் கிளப்­பும் என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

இது­போல் எச்­எஸ்­பிசி, ஜே பி மோர்­கன், டாய்ச் வங்கி, ஸ்டேண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்கி, பேங்க் ஆஃப் நியூ­யார்க் போன்ற வங்­கி­களி­லும் சந்­தே­கத்­திற்­குரிய பணப் பரி­வர்த்­த­னை­கள் தென்­படு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் டிபி­எஸ் வங்கி, 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து 2017ஆம் ஆண்­டு ­வரை 461 பணப் பரி­வர்த்­தனை சம்­ப­வங்­களில் அமெ­ரிக்க டாலர் 596.8 மில்­லி­யன் வெளி­யேறக் கார­ண­மாக இருந்­த­து­டன் அமெ­ரிக்க டாலர் 228.3 மில்­லி­யனை பெற்­றுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கிறது.

இதே­போல், சிஐ­எம்பி வங்கி அமெ­ரிக்க டாலர் 250.4 மில்­லி­யன் வெளி­யே­றக் கார­ண­மாக இருந்­த­து­டன் அமெ­ரிக்க டாலர் 34.3 மில்­லி­யனைப் பெற்­றுள்­ளது.

டாய்ச் வங்கி அெமரிக்க டாலர் 224.3 மில்­லி­யன் வெளி­யே­றக் கார­ண­மாக இருந்து 62 மில்­லி­யன் பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon