முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டிய வயது 6ஆக உயர்வு

சிங்கப்பூரில் இனிமேல் ஆறு வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறார்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது சட்டமாக்கப்படும்.

தற்போது 2 வயதுக்கும் அதற்கும் மேற்பட்ட சிறார்களுக்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.

இந்த மாற்றங்கள் நேற்று நிகழ்ந்த பல அமைச்சுகள் பணிக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

ஆறு வயதுக்கும் அதற்குக் குறைவான வயதுடைய சிறார்களுக்கு முறையாக முகக்கவசம் அணியும் ஒருங்கிணைப்புத் திறன் முழுமையாக இருக்காது என உலக சுகாதார அமைப்பும் ஐக்கிய நாட்டு அனைத்துலக சிறார் அவசரநிலை நிதி அமைப்பும் (UNICEF) அண்மையில் தெரிவித்தன.

அதைத் தொடர்ந்து அவ்விரு அமைப்புகளுக்கும் ஒத்துப்போகும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் இயக்குநர் திரு கென்னத் மாக் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஏற்கெனவே தற்போது இளம் பிள்ளைகள் முகக்கவசம் அணிவதில் நீக்குப்போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் 12 வயதுக்குக் குறைவான சிறார்கள் முகக்கவசத்திற்குப் பதில் முகக்கேடயம் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்றும் அவர் சுட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!