இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனை செய்திருக்க வேண்டும்

1 mins read
7a9f5ea5-2645-4d45-b041-a3b2e579c204
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் புறப்படும் முன் மேற் கொள்ளும் கொவிட்-19 கிருமி பரிசோதனையை அனைத்துலக அங்கீகாரம் பெற்ற அல்லது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் செய்திருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாதவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னர், 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்றிருந்தால், கிருமித்தொற்றைக் கண்டறியும் 'சிரோலஜி' சோதனை செய்ய வேண்டும்.

இதில் தொற்று இருப்பது தெரியவந்தால் அவர்கள் 'ஸ்வாப்' பரிசோதனை செய்யத் தேவையில்லை.