சுடச் சுடச் செய்திகள்

மூலாதார பணவீக்கம் தொடர்ந்து இறங்குமுகம்

சிங்கப்பூரில் பயனீட்டுப் பொருட்களின் விலைச் சரிவு ஆகஸ்ட் மாதம் சற்றே குறைந்தது. இதற்குக் காரணம், சேவைத் துறை, சில்லறை வர்த்தகம், மின்சாரம், எரிவாயு போன்றவற்றின் விலைச் சரிவு மெதுவடைந்ததே என்று கூறப்படுகிறது.

இதில் தங்குமிட வசதி, தனியார் போக்குவரத்து செலவு ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், ஆகஸ்ட் மாதத்தில் -0.3 விழுக்காடு மட்டுமே விலைகள் இறக்கம் கண்டதாகக் கூறப்படுகிறது. இதுவே ஜூலை மாதத்தில், பத்தாண்டுகளில் காணாத அளவு -0.4 விழுக்காடாக இறங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஆகஸ்ட் மாதத்தையும் சேர்த்து மூலதார பணவீக்கம் தொடர்ச்சியாக ஏழு மாதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனியார் போக்குவரத்து செலவினத்தின் அதிகப்படியான வீழ்ச்சியால் ஒட்டுமொத்த பணவீக்கம் -0.4 வீழ்ச்சி கண்டதாக சிங்கப்பூர் பண நிதி ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வாகன விலைகளின் வீழ்ச்சியால் தனியார் போக்குவரத்து செலவினம் ஜூலை மாதம் -2.1 விழுக்காடும் ஆகஸ்ட் மாதம் -2.3 விழுக்காடும் வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில்லறை, மற்ற பொருட்களின் விலைகள் ஆகஸ்ட் மாதம் -1.3 விழுக்காடும் ஜூலை மாதம் -1.6 விழுக்காடும் வீழ்ச்சி கண்டதாக கூறப்படுகிறது. ஒப்புநோக்க, துணிமணி, காலணிகள், பொழுதுபோக்கு பொருட்களின் விலைகள் மெதுவான வீழ்ச்சி கண்டதாக புள்ளிவிவரங்கள் காட்டுவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், மின்சாரம், எரிவாயு விலைகளின் ஆகஸ்ட் மாத வீழ்ச்சி, அதற்கு முந்தைய ஜூலை மாதத்துடன் ஒப்பிட -14.6 விழுக்காடாக சற்று மெதுவடைந்தது என்றும் கூறப்படுகிறது. உணவு விலைகளைப் பொறுத்தவரை ஜூலை மாதம் -2.2 வீழ்ச்சி கண்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் சிறிது குறைந்து -1.8 விழுக்காடு இறக்கம் கண்டது என்றும் பண நிதி ஆணையம், வர்த்தக, தொழில் அமைச்சின் புள்ளிவிவரக் கணக்குகள் காண்பிக்கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon