பங்குச் சந்தை தொடர்புக்கு சிங்கப்பூர், இந்தியா இணக்கம்

சிங்கப்பூரும் இந்தியாவும் தங்களுக்குள்ள சர்ச்சைக்குத் தீர்வு கண்டு பங்குச் சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இணங்கியுள்ளன.

இந்திய நிறுவனங்களின் பங்குகளை சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்வதுவது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே சமரச மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்பில், இந்தியாவின் நிஃப்டி இன்டெக்ஸ் 50 பங்குகளை இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டி என்ற நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூரில் பரிவர்த்தனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூர் பங்குச் சந்தையும் இந்திய தேசிய பங்குச் சந்தையும் மற்ற பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து இதற்கான தொடர்புக் கட்டமைப்பை உருவாக்கும்,” என்று சிங்கப்பூர் பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி லோ பூன் சாய் அறிக்கையில் ஒன்றில் செவ்வாய்க்கிழமை கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!