சிஓஇ கட்டணங்களில் ஏற்ற, இறக்கம்

சிஓஇ கட்டணங்களில் ஏற்ற, இறக்கம்

1 mins read
0d53fb65-b605-4eb8-ba19-53d3ca7d0896
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்களுக்கான ஏலம் நேற்று ஏற்றம், இறக்கமாக முடிவுற்றது.

சிறிய கார்களுக்கான கட்டணம் $38,504க்கு உயர்ந்தது.

இரு வாரங்களுக்கு முன்னர் அது $37,766 ஆக இருந்தது. அதேநேரம் பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் குறைந்தது.

கடந்த ஏலத்தில் $41,510 ஆக இருந்த அதன் கட்டணம் நேற்று $40,989க்குக் குறைந்தது.

பெரும்பாலும் பெரிய கார்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் $40,790லிருந்து $41,001க்கு அதிகரித்தது. அதேபோல வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $26,644லிருந்து $28,589க்கு உயர்ந்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணத்தில் நேற்று சிறிய அளவிலான சரிவு காணப்பட்டது.

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் $7,399 ஆக இருந்த சிஓஇ கட்டணம் நேற்று $7,331 ஆகக் குறைந்தது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கான ஏலம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தபோது விற்பனை இன்றி வாகனங்கள் தேங்கின.

அவற்றை விற்பதற்காக அறிவிக்கப்பட்ட சலுகைகளாலும் புதிய கார்களின் அறிமுகத்தாலும் நேற்றைய சிஓஇ கட்டணங்கள் மிதமான அளவில் இருந்தன.

மேலும் குறைந்த அளவிலான சான்றிதழ்கள் விநியோகத்திற்கு விடப்படுவது ஏலத்தில் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.