சிங்­கப்­பூர் ஆயுதப் படை­களில் வீரர்களிடையே வெப்ப பாதிப்புகள் 40% குறைவு

சிங்­கப்­பூர் ஆயுதப் படை­களில் வெப்­பம் கார­ண­மாக வீரர்­கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சம்­ப­வங்­கள் கடந்த இரண்டு ஆண்­டு­களில் 40 விழுக்­காடு குறைந்­துள்­ளன.

வெப்­பத் தாக்­கு­தல் கார­ண­மாக யாரும் மர­ணம் அடை­ய­வில்லை என்­றும் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

முதல் நிலை கார்ப்­ப­ரல் டேவ் லீ என்­ப­வர் 2018ல் வெப்­பத் தாக்கு­தல் கார­ண­மாக மர­ண­ம­டைந்­தார்.

அதனை அடுத்து வெப்­பம் கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு ­க­ளைக் குறைக்க பல மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­ற­தாக அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

அமைச்­சும் சிங்­கப்­பூர் ஆயுதப் படை­களும் தொடர்ந்து மறு­பரிசீலனை செய்து பாது­காப்பு நிர்­வா­கத்­தை­யும் பயிற்சி முறை­யை­யும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­களை அடை­யா­ளம் காணும்.

பயிற்சி விபத்­து­கள் அறவே இல்­லாத ஒரு நிலையை எட்­ட­வேண்­டும் என்ற இலக்கை நிறை­வேற்ற அவை இரண்டும் பாடு­படும் என்றும் தற்­காப்பு அமைச்சு குறிப்­பிட்­டு உள்­ளது.

பயிற்­சி­யின்போது வெப்­பம் கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு­கள் 2012 முதல் குறைந்துள்ளன.

ராணு­வத்­தில் 2012 ஏப்­ரல் முதல் 2018 மார்ச் வரை வெப்­பம் கார­ண­மாக ஏற்­பட்ட மயக்­கச் சம்­ப­வங்­கள் 25 நிகழ்ந்­தன. வெப்­பம் கார­ண­மாக வீரர்­கள் சோர்­வ­டைந்த சம்­ப­வங்­கள் 137 நிகழ்ந்­தன என்று 2018ல் ஒரு குழு தாக்­கல் செய்த அறிக்கை தெரி­வித்­தது. யாரும் மர­ணம் அடை­ய­வில்லை.

முதல் நிலை கார்ப்­ப­ரல் டேவ் லீ மர­ணத்தை அடுத்து அந்த ஐவர் குழு அமைக்­கப்­பட்டு ஆயு­தப் படை­களில் பயிற்­சி­யின்போது வெப்­பம் கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு ­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கான உத்­தி­கள் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட்­டன.

பயிற்­சி­யின்போதும் பயிற்­சிக்­குப் பிற­கும் படை­வீ­ரர்­கள் தங்­கள் கைகளை 15 முதல் 30 வினா­டி­கள் ஐஸ் நீருக்­குள் வைத்­தி­ருந்து அதன் மூலம் உடல்­வெப்­ப­நிலையைக் குறைத்­துக் கொள்­வ­தற்­கான ஏற்­பாடு இடம்­பெற்­றது.

வீரர்­கள் குளிர் அட்­டை­களை உட­லில் கட்­டிக்­கொண்டு அதன் மூலம் வெப்­பத் தாக்­கு­தல்­க­ளைத் தவி­ர்த்­துக் கொள்­ள­வும் 2018 முதல் வச­தி­கள் இடம்­பெற்­றன. இதர பல ஏற்­பா­டு­களும் இடம்­பெற்று வந்­துள்­ளன.

தள­ப­தி­கள், மருத்­துவச் சேவை­யா­ளர்­கள் அைனவ­ருக்­கும் புதிய பயிற்சி விதி­மு­றை­கள் நடப்­புக்கு வந்­தன. நேரம், இடம், அடை­யா­ளம் பற்­றிய எளிய கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளிக்க இய­லாத பயிற்சி­ வீரர் ஒவ்­வொ­ரு­வரை­யும் அப்­புறப்­படுத்த இந்த விதி­மு­றை­கள் சோதித்­துப் பார்க்­கப்­பட்­டன.

படை வீரர்­கள் பாது­காப்பு வரம்­பைக் கடந்து அள­வுக்கு அதி­க­மாக பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யில் அதிக வாய்ப்­பு­களும் கொடுக்­கப்­பட்­டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!