சுடச் சுடச் செய்திகள்

சிங்ஹெல்த் தாதியரின் அறப்பணி; முகக்கவசம் தைத்து தொண்டூழியம் செய்து உதவுகிறார்கள்

சிங்­ஹெல்த் பல­துறை மருந்­த­கத்­தைச் சேர்ந்த தாதி­யர்­கள் சிலர் சாப்­பாட்டு நேரங்­க­ளி­லும் அலு­வ­லக நேரத்­திற்­குப் பிற­கும் வார­மு­டிவு நாட்­க­ளி­லும் ஓய்­வின்றி அறப்­ப­ணிக்­காக முகக்­க­வ­சங்­க­ளைத் தைத்துக் கொடுக்கிறார்கள்.

அவர்­கள் உரு­வாக்­கிய முகக்­க­வ­சங்­கள் சிங்­ஹெல்த் நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்ப உறுப்­பினர்­க­ளுக்­கும் விற்­கப்­பட்டு அதன்­ மூ­லம் கிடைக்கும் தொகை உதவி தேவைப்­படும் நோயா­ளி­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்படு­கிறது.

சிங்­ஹெல்த் நிறு­வ­னத்­தின் தாதி­யர் நிர்­வா­கத் துறை உதவி இயக்­கு­ந­ரான டான் சியாம் கிங் நேற்று இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார். இந்த யோசனை இந்த ஆண்டு தொடக்­கத்­தில் தன்­னி­டம் உதித்­த­தாக திரு­வாட்டி டான், 64, குறிப்­பிட்­டார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளில் வெளி­யாகி இருந்த ஒரு செய்­தி­யைப் படித்து முகக்­க­வ­சம் தைப்­பது எப்­படி என்­பதை இவர் கற்­றுக்­கொண்­டார். இவர் தைத்­த­வற்­றைப் பயன்­ப­டுத்­தி­ய­வர்­கள், முகக்­க­வ­சங்­கள் வச­தி­யா­க­வும் பொருத்­த­மா­க­வும் இருப்­ப­தா­கக் கூறி­னர்.

அத­னால் ஊக்­க­ம­டைந்த திரு­வாட்டி டான் தனது முயற்சி களை வேகப்­ப­டுத்­தி­னார். இந்­தச் சேவை­யில் ஈடு­பட தாதி­யர்­கள் முன்­வ­ர­லாம் என்று ஆகஸ்ட் மாதம் இவர் அழைப்பு விடுத்­தார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதியே சுமார் 24 தாதி­யர்­கள் முன்­வந்­த­னர். தைக்கத் தெரி­யா­த­வர்­கள் இதர வழி­களில் உத­வி­னார்­கள். தையல் இயந்­தி­ரங்­கள் முத­லான செல­வு­களைத் தாதி­யரே ஏற்­றுக்­கொண்­டார்­கள். செப்­டம்­பர் 1 முதல் 18 வரை ஓய்வு நேரத்­தில் தாதி­யர்­கள் மேலும் பல முகக்­க­வ­சங்­க­ளைத் தைத்து உரு­வாக்­கினர்.

முடி­வில் 430க்கும் அதிக முகக்­ க­வ­சங்கள் உரு­வா­யின. அவை தலா $10 விலை­யில் விற்­கப்­பட்­டன.

இந்த அறப்­ப­ணி­யில் பக்­கி­ரிசாமி சரோ­ஜி­னி­ தேவி என்ற 66 வயது தாதி­யும் பங்­கெ­டுத்­துக்கொண்­டார்.

“வசதி குறைந்த நோயா­ளி­களுக்கு உத­வுவதால் இதில் ஈடு­படு­வது ஒரு வகை மன­நி­றை­வைத் தரு­கிறது. இத­னால் இதில் நான் ஈடு பட்டேன்,” என்று சிங்­ஹெல்த் பாசிர் ரிஸ் பல­துறை மருந்­த­கத்­தின் நிர்­வா­கி­யான திரு­வாட்டி சரோ­ஜி­னி­ தேவி கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon