சுடச் சுடச் செய்திகள்

செங்காங்கில் கைகலப்பு: ஆடவர் மீது குற்றச்சாட்டு

செங்காங்கில் ஹியா சுவீ ஹெங் என்பவருக்கு வேண்டுமென்றே கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக லீ சாய் ஹுவா, 45, என்ற ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

செங்காங்கில் ரிவர்வேல் கிரசெண்டில் உள்ள புளோக் 182ஏ வெற்றுத்தளத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு திரு ஹியாவை லீ உதைத்த தாகவும் கையால் குத்திய தாகவும் கூறப்பட்டது.

ஹியாவை ஏறி மிதித்து தலையில் லீ அறைந்ததாகவும் இதனால் ஹியாவின் முகத்தில் எலும்பு முறிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. மனநிலை கவனிப்பிற்காக லீ விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் அக்டோபர் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

அந்த இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதைக் காட்டும் காணொளி வெளியாகி இருந்தது.

போலிசுக்கு தகவல் கிடைத்தது. காயமடைந்து கிடந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நான்கு மணி நேரத்தில் சந்தேகநபர் பிடிபட்டதாக போலிஸ் தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon