சுடச் சுடச் செய்திகள்

அதிபர்: எதிர்கால வாய்ப்புகளை ஜிஐசி, தெமாசெக் கைவிடாது

சிங்­கப்­பூ­ரின் இறை­யாண்மை நிதிய­மான ஜிஐ­சி­யும் தெமா­செக் ஹோல்டிங்ஸ் முத­லீட்டு நிறு­வனமும் கொவிட்-19 பாதிப்­பு­களில் இருந்து தங்­க­ளைப் பாது­காத்­துக் கொள்ள நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன.

அதே வேளை­யில், எதிர்­கால வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­குத் தோதாக அவை தொடர்ந்து தங்­க­ளைச் சரி­செய்­து­கொள்­ளும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்­தார்.

முத­லீட்டு வாய்ப்­பு­கள் பற்றி அந்த இரண்டு அமைப்புகளும் தனக்கு விளக்­கம் அளித்­த­தா­க­வும் அதி­பர் நேற்று ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டார்.

அந்த இரண்டு அமைப்­பு­களும் சிங்­கப்­பூ­ரின் சேமிப்­பு­களை முத­லீடு செய்­வ­தால் அவற்­றின் உலகப் பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள், முத­லீட்டு உத்­தி­கள், செயல்­தி­றன் ஆகி­ய­வற்றைப் பற்றி வழக்­க­மாக தனக்கு விளக்­கம் அளிக்­க­வேண்­டி­யது முக்­கி­யமா­னது என்று அதி­பர் திருவாட்டி யாக்கோப் குறிப்­பிட்­டார்.

ஆண்­டுக்குக் குறைந்­தது இரண்டு முறை தனக்கு விளக்­கம் அளிக்­கப்­ப­டு­கிறது என்­றும் இந்த ஆண்­டில் மெய்­நி­கர் பாணி­யில் விளக்­கம் அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் அதி­பர் கூறி­னார்.

இந்த ஆண்­டில் இது­வரை அளிக்­கப்­பட்ட விளக்­கத்­தில் கொவிட்-19 பாதிப்­பு­கள் பற்றி தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­பர் தெரி­வித்­தார். தெமா­செக் நிறு­வ­னத்­தின் நிகர முத­லீ­டு­கள் 2020 மார்ச் 31 நில­வ­ரப்­படி $306 பில்லியன்.

இது சென்ற ஆண்­டில் $313 பில்­லி­யன் என்று இந்த அமைப்பு தெரி­வித்­தது.

கொவிட்-19 கார­ண­மாக பல முத­லீட்­டா­ளர்­களும் பாதிக்­கப்­பட்டு உள்­ள­தை அதி­பர் சுட்­டி­னார். இதற்கு சிங்­கப்­பூர் அமைப்­பு­களும் விதி­வி­லக்கு அல்ல.

கொவிட்-19 பாதிப்­பு­க­ளைத் தடுக்க ஜிஐசி அமைப்­பும் தெமா­செக் நிறு­வ­ன­மும் பல நட­வ­டிக்கை­களை எடுத்­துள்­ள­தாக அதி­பர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19க்கு பிந்­தைய உல­கத்­திற்­குத் தோதாக ஒவ்­வொ­ரு­வரும் தங்­க­ளைச் சரி­செய்­து­கொண்டு வரு­கி­றார்­கள். தேவை மற்­றும் விநி­யோக தொடர்­பு­களும் மாற்­ற­ம­டை­யக்­கூ­டும்.

இந்த நிலை­யில், ஜிஐசி அமைப்­பும் தெமா­செக் நிறு­வ­ன­மும் எதிர்­கால வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் வகை­யில் தொடர்ந்து பொருத்­த­மான நிலை­யில் இருந்து வர­வேண்­டும் என்று திரு­வாட்டி ஹலிமா கூறி­னார்.

சிங்கப்பூர் நாணய ஆணையம், ஜிஐசி, தெமாசெக் ஆகியவை செய்துள்ள முதலீடுகள் மூலம் கிடைக்கும் நிகர முதலீட்டு வருமானம், அரசாங்கத்துக்குக் கிடைக்கும் மிக முக்கிய வருவாய் ஆகும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon