வெப்பத் தாக்குதல் மரணம்: 6 தேசிய சேவையாளர்களுக்கு அபராதம்

சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­க­ளின் முழு நேர தேசிய சேவை­யா­ள­ராக இருந்த டேவ் லீ என்­ப­வர் 2018ல் மர­ண­ம­டைந்­தார். அதன் தொடர்­பில் ஆறு சேவை­யா­ளர்­கள் மீது ராணுவ நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­ட­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இரண்டு முழு நேர சேவை­யா­ளர்­கள், நான்கு தயார் நிலை தேசிய சேவை­யா­ளர்­கள் அடங்­கிய அந்த ஆறு பேர் மீதும் முதன் முத­லாக பிப்­ர­வ­ரி­யில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது. அவர்­க­ளுக்கு $1,800 முதல் $4,500 வரை அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதோடு, அவர்­களில் மூவ­ரின் பத­வி­நிலை, 3வது சார்­ஜண்ட்­டில் (என்­எஸ்) இருந்து கார்ப்­ப­ர­லா­கக் குறைக்­கப்­பட்­டது.

ஏழா­வது சேவை­யா­ளர் ஒரு­வர் இந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் விடு­விக்­கப்­பட்­டார். ஆனால் குற்­றச்­சாட்­டில் இருந்து அவரை நீதி­மன்­றம் விடு­விக்­க­வில்லை.

இருந்­தா­லும் புற்­று­நோய் கார­ண­மாக அவர் பிப்­ர­வரி 13ல் மர­ண­ம­டைந்­தார். முதல் நிலை கார்ப்­ப­ர­லாக இருந்த டேவ் லீக்கு சம்­ப­வம் நிகழ்ந்தபோது வயது 19. அவர் முழு நேர தேசிய சேவை­யா­ள­ராக இருந்­தார்.

முதலாவது ­கா­வற்படை­ பட்டாளத்தைச் சேர்ந்த வீரராக இருந்த அவர், 2018 ஏப்­ரல் 18ஆம் தேதி பிடோக் முகா­மில் 8 கி.மீ. வேக நடைப் பயிற்­சியை முடித்த பிறகு வெப்­பத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னார்.

அதே ஆண்டு ஏப்­ரல் 30ஆம் தேதி அவர் மர­ண­ம­டைந்­தார்.

தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், அந்த மர­ணச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தற்கு வழி வகுத்த கார­ணங்­கள் பற்­றிய பூர்­வாங்க தக­வல்­களை 2018 ஆகஸ்ட் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­தார்.

பயிற்சி இடத்­தில் வீரர்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டும்­போது அதைச் சமா­ளிக்க போதிய அள­வில் ஏற்­பாடு இல்லை என்­ப­தும் மருத்­துவ நிலை­யத்­துக்கு வீர­ரைக் கொண்டு செல்ல தாம­த­ம­டைந்­த­தும் அந்த வீரர் வெப்­பத்­தாக்­கு­த­லுக்கு இலக்­காகி மர­ணம் அடைய கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்­பது பூர்­வாங்க அனு­மா­னம் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

விதி­மு­றையை மீறி இரண்டு படை வீரர்­கள் தங்­கள் கை பேசி­களைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்காக, மரண சம்­ப­வம் நிகழ்ந்த வேக நடைப் பயிற்­சிக்கு முந்­தைய இர­வில் முதல்­நிலை கார்ப்­ப­ரல் லீயும் அவ­ரு­டைய படைப்­பி­ரிவு சகாக்­களும் 30 நிமிட நேரம் தண்­டிக்­கப்­பட்டு இருந்­த­னர் என்­றும் அமைச்­சர் அப்­போது கூறி இருந்­தார்.

அந்­தத் தண்­ட­னை­யில் பல வித உடற்­ப­யிற்­சி­கள் அடங்­கும்

அதை­ய­டுத்து ஆயு­தப்­ப­டை­களில் பயிற்­சிப் பாது­காப்பு மற்­றும் குறை­பா­டு­கள் பற்றி விவா­தங்­கள் தலை­தூக்­கின. இதனை அடுத்து ஐவ­ரைக் கொண்ட ஆய்வுக் குழு அமைக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!