கொவிட்-19: நோய் முறியடிப்புக் காலத்தில் மனவேதனை அதிகரிப்பு

கொவிட்-19 நெருக்­கடி காலத்­தில் பல­ரது வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்டு, அவர்­கள் அதிக பதற்றத்தில் இருந்­த­தால், அவர்­க­ளின் மன­வே­த­னை­யும் அதி­க­ரித்­தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, மன­வே­த­னை­யால் அவதி­யு­று­வோருக்கு ஆத­ர­வ­ளிக்­கும் நோக்­கத்­தி­லும் மன உளைச்­சலி­லி­ருந்து விடு­பட்டு, மீள்­தி­றனை எவ்­வாறு வளர்த்­துக்­கொள்­ள­லாம் என்­பது பற்றி விளக்­கும் பொது விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­தும் வகை­யி­லும் தேசிய சமூக சேவை மன்­றம் அதன் தேசிய இயக்­கத்தை விரி­வு­ப­டுத்­த­வுள்­ளது.

கொரோனா ப­ர­வல் விளை­வித்த அதி­க­மான மன­ந­லச் சவால்­க­ளைச் சமா­ளிக்­கும் நோக்கில், மன­நலம் பற்றிய களங்­கத்திற்கு எதி­ரான தேசிய இயக்­கத்­தின் மூன்­றாம் பதிப்பை மன்­றம் நேற்று வெளி­யிட்­டது.

மெய்­நி­கர் முறையில் நடை­பெற்ற இயக்­கத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, தேசிய சமூக சேவை மன்­றம் 900 பேரி­டம் நடத்­திய கருத்­தாய்­வில், நோய்­ மு­றி­ய­டிப்­புக் காலத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் அதிகள­வில் மன­வே­த­னைக்கு ஆளா­கி­னர் என்­றும் முன்­னரே மன­ந­லப் பிரச்­சினை இருந்தோருக்கு அது கூடு­தல் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது என்­றும் தெரியவந்­ததாகக் கூறினார்.

“ஈராண்­டு­க­ளுக்­கு­முன் இந்த இயக்­கத்­தைத் தொடங்­கி­னோம். அப்­போது வேறு உல­க­மாக இருந்­தது. நாம் ஏற்­ப­டுத்­திய வலு­வான அடித்­த­ளத்­தைக் கொண்டு சிங்­கப்­பூர் நிலை­யாக வளர்ந்­து­கொண்­டி­ருந்த வேளை­யில், நமது பொரு­ளி­யல் உரு­மாற்­றம் பெற்­றது; நமது சமூக பிணைப்பு வலுப்­பெற்­றி­ருந்­தது,” என்று திரு மச­கோஸ் விவ­ரித்­தார்.

“கொவிட்-19 நெருக்­கடி, மன­நலத்தை முக்­கி­ய­மாக கவ­னத்­தில் கொள்­ளக்­கூ­டிய பிரச்சினையாக உரு­வாக்­கி­விட்டது. கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வது, வேலை­களை இழப்­பது, சமூக அள­வில் தனி­மைப்­ப­டுத்­தப்­படு­வது என்று பலர் பதற்­றத்­தின் உச்­சத்­தில் இருந்­த­னர்.

“வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்டு மக்­கள் பெரும் மன­வே­த­னை­யில் அவ­தி­யு­று­வ­தால், மன­ந­லத்திற்கான தேவை­கள் அதி­க­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது,” என்­றும் திரு மச­கோஸ் விளக்­கி­னார்.

“மன­ந­லப் பிரச்­சினை உள்­ளோ­ருக்கு ஆத­ர­வ­ளிக்க அர­சாங்­கம் பல முயற்­சி­களை எடுத்­துள்­ளது. அவற்­றில் ஒன்று இவ்வாண்டு பிப்ர­வ­ரி­யில் தொடங்கப்­பட்ட இளை­யர் மன­நல நல்­வாழ்­வுக் கட்­ட­மைப்பு.

“அதன்மூலம் இளை­யர்­க­ளி­டையே மன­ந­லத்தை மேம்­ப­டுத்த முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டன. இந்தக் கட்­ட­மைப்­பின் அழைப்பை ஏற்று 1,000க்கு மேற்­பட்­டோர் இத்­திட்­டத்­தில் சேர்ந்­துள்­ள­னர்,” என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

மற்­றொரு திட்­டமான, ‘மைண்ட்­லைன்.எஸ்ஜி’ இணை­ய­வா­சல் கடந்த ஏப்­ர­லில் தொடங்­கப்­பட்டது. இத்­திட்­டம் தனி­ந­பர்­கள் தங்­கள் மனஉளைச்­ச­லுக்­குத் தீர்வு காணும் வளங்­க­ளைத் தேடு­வ­தற்­கும் தங்­கள் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கும் உதவி வரு­கிறது.

“மன­ந­லப் பிரச்­சி­னை­கள் உள்­ள­வர்­க­ளுக்கு சிறந்த முறை­யில் ஆத­ர­வ­ளிக்­கும் நோக்­கத்­தில், சமூக மற்­றும் சுகா­தா­ரத் துறை­களில் உள்ள பங்­கா­ளித்­துவ அமைப்­பு­க­ளு­டன் இணைந்து நடப்­பில் உள்ள கொள்­கை­களை மறு­ஆய்வு செய்து வரு­கி­றோம்,” என்­றார் திரு மச­கோஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!