சுடச் சுடச் செய்திகள்

இணையம் வழியே 'சிங்கப்பூர் உணவுக் கண்காட்சி'

ஆண்­டு­தோ­றும் இடம்­பெ­றும் சிங்­கப்­பூர் உண­வுக் கண்­காட்சி கொவிட்-19 நோய்ப் பர­வல் கார­ண­மாக இம்­முறை இணை­யம் வழி­யா­க­, சிறிய அள­வி­ல் நட­த்­தப்­ப­ட­வுள்­ளது.

கடந்த ஆண்டு 104 உணவு தயா­ரிப்­பா­ளர்­கள் 146 கூடங்­களை அமைத்­தி­ருந்த நிலை­யில் இவ்­வாண்டு கண்­காட்­சி­யில் 52 பேரே பங்­கேற்­க­வுள்­ள­னர்.அடுத்த மாதம் 5ஆம் தேதி­யில் இருந்து நவம்­பர் 1ஆம் தேதி வரை உண­வுக் கண்­காட்சி நடை­பெ­றும் என சிங்­கப்­பூர் உணவு தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம் அறி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் உணவு தயா­ரிப்­பா­ளர்­கள் தங்­க­ளது வர்த்­த­கத்தை மின்­னி­லக்­க­ம­யப்­ப­டுத்த உத­வு­வதில் இவ்­வாண்டு கண்­காட்சி கவ­னம் செலுத்­தும். உணவு தயா­ரிப்­பா­ளர்­கள் தங்­க­ளது உணவு வகை­களை இணை­யம் வழி­யாக விற்க ஏது­வாக சிங்­கப்­பூர் உணவு தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம், ‘சிங்­கப்­பூர் ஃபுட் யுனை­டெட்’ மின்­வ­ணி­கத்­த­ளத்­து­டன் இணைந்து செயல்­பட்டு வரு­கிறது.

ஒவ்­வொரு வணி­கச் சின்­னத்­திற்­கும் குறைந்­த­பட்­சம் $40 செல­விட வேண்­டும் என அந்த இணை­யத்­த­ளம் குறிப்­பிட்­டுள்­ளது என்­றும் விநி­யோ­கக் கட்­ட­ண­மாக $1.50 வசூ­லிக்­கப்­படும் என்­றும் சங்­கம் தெரி­வித்­தது. ஃபேஸ்புக் நேரலை அங்­கங்­களும் பதி­வு­களும் இடம்­பெ­றும். 220,000க்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ‘சிங்­கப்­பூர் ஹோம் குக்ஸ்’ எனும் இணை­யக் குழு மூல­மாக உணவு வகை­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­படும். 21வது முறை­யாக நடை­பெ­றும் உண­வுக் கண்­காட்­சி­யின்­போது, புதன் மற்­றும் சனிக்­கி­ழ­மை­தோறும் இடம்­பெ­றும் வகை­யில் எட்டு ஃபேஸ்புக் நேரலை அங்­கங்­களை அக்­குழு நடத்­தும்.

நேற்று நடந்த கண்­காட்­சி­யின் அறி­முக நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட கலா­சார, சமூக, இளை­யர் துறை துணை அமைச்­சர் லோ யென் லிங், ‘லக்சா’ செய்­வது எப்படி எனத் தெரிந்­து­கொண்­டார்.

“வர்த்­த­கங்­கள் வெற்­றி­க­ர­மா­ன­தாக உரு­வெ­டுக்க புத்­தாக்­கம், ஒத்­து­ழைப்பு, மின்­னி­லக்­க­ம­யம் ஆகிய மூன்று முக்கிய கூறு­கள் தேவை,” என்­றார் திரு­வாட்டி லோ.

“எங்­க­ளது பெரும்­பா­லான உறுப்­பி­னர்­கள் இன்­னும் தங்­க­ளு­டைய வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் நேரடி ஈடு­பாட்­டையே கொண்­டு உள்­ள­னர். அவர்­கள் இணை­ய­வழி விற்­ப­னை­யில் அடி­யெடுத்து வைக்க ‘சிங்­கப்­பூர் ஃபுட் யுனை­டெட்’ மின்­வ­ணி­கத்­த­ளம் உத­வும்,” என்று சிங்­கப்­பூர் உணவு தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கத்­தின் தலை­வர் டேவிட் டான் கூறி­னார்.

கடந்த ஆண்டு கண்­காட்சி ஏறத்­தாழ 450,000 பேரை ஈர்த்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon