சுடச் சுடச் செய்திகள்

டிபிஎஸ் பேலா, ஸ்டாண்சார்ட் வாடிக்கையாளர்கள் ‘கூகல் பே’ செயலி மூலம் பணம் செலுத்தலாம்

டிபி­எஸ் பேலா, ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வாடிக்­கை­யா­ளர்­கள் இனி கூகல் பே செய­லி­யைப் பயன்­படுத்தி தங்­க­ளது வங்­கிக் கணக்­கில் இருந்து ‘பேநவ்’ சேவை­யு­டன் பதி­வு­செய்துள்ள எவ­ருக்­கும் நேரடி­யா­கப் பணம் அனுப்­ப­லாம்.

ஓசி­பிசி வங்கி கடந்த ஏப்­ர­ல் மாதத்தி­லேயே இத்­தெ­ரிவை அறி­மு­கப்­படுத்­தி­விட்­டது.

பணப் பரி­மாற்­றச் சேவை­யான ‘பேநவ்’வும் கூகல் பே செய­லி­யும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­ட­தன் மூல­மாக, டிபி­எஸ் பேலா, ஓசி­பிசி, ஸ்டாண்­சார்ட் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளது வங்­கிக் கணக்கை கூகல் பே கைபே­சிச் செய­லி­யு­டன் இணைக்க முடி­யும். அப்­ப­டிச் செய்­வதன் மூலம் பற்­றட்டை இன்றி அவர்­கள் பணம் செலுத்த முடி­யும்.

‘பேநவ்’ சேவை கடந்த 2017ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அச்­சே­வை­யில் பங்­கேற்­றுள்ள ஒன்­பது வங்­கி­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளது கைபேசி எண் அல்லது அடை­யாள அட்டை எண்­ணைப் பயன்­ப­டுத்தி, தங்­க­ளது வங்­கிக் கணக்­கில் இருந்து பணம் செலுத்­த­வும் பெற­வும் முடி­யும்.

கூகல் பே செய­லி­யைப் பயன்­படுத்­து­வோர் எஸ்­ஜி­கி­யூ­ஆர் அல்­லது பேநவ் கியூ­ஆர் குறி­யீட்டை வரு­டு­வ­தன் அல்­லது தனித்து அடை­யா­ளம் காட்­டக்­கூ­டிய ‘யூஇ­என்’ எண்­ணைக் குறிப்­பி­டு­வ­தன் மூலம் வணி­கர்­க­ளுக்­குப் பணம் செலுத்­த­லாம். பணம் பெறு­ப­வர் ‘கூகல் பே’ செய­லி­யைக் கொண்­டி­ருக்­கத் தேவை­யில்லை.

கூகல் பே செயலி மூலம் ஒரு நாளைக்கு $2,000 வரை பணப் பரி­வர்த்­தனை செய்­ய­லாம். ஆனா­லும், பங்­கேற்­கும் வங்­கி­கள் தங்­களுக்­கென பிரத்­தி­யேக வரம்பை வகுத்­துக்­கொள்ள அனு­ம­திக்­கப்­படு­கின்­றன.

எடுத்­துக்­காட்­டாக, ஸ்டாண்­சார்ட் வங்­கி­யில் 1,000 வெள்­ளி­யும் ஓசி­பிசி வங்­கி­யில் 2,000 வெள்­ளி­யும் ஒரு நாளுக்கான அதிகபட்ச வரம்­பாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளன.

டிபி­எஸ், ஓசி­பிசி, ஸ்டாண்­சார்ட் ஆகிய வங்­கி­க­ளைத் தவிர்த்த மற்ற வங்­கி­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள், தங்­க­ளது வங்­கிக் கணக்கை ‘டிபி­எஸ் பேலா’ மூல­மாக இணைப்­பதன் மூலம் கூகல் பே செய­லி­யைப் பயன்­ப­டுத்தி பணப் பரி­மாற்­றம் செய்ய முடி­யும்.

முன்­ன­தாக, ஆப்­பிள் பே, சாம்­சுங் பே செய­லி­க­ளைப் போல கூகல் பே வாடிக்­கை­யா­ளர்­களும் தங்­களது கட­னட்­டை­க­ளைக் கொண்டே கடை­களில் பொருள் வாங்­கப் பணம் செலுத்த முடிந்­தது. ஆப்­பிள் பே, சாம்­சுங் பே செய­லி­க­ளைக் கொண்டு ‘பேநவ்’ சேவை­யைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

கிராப் பே பய­னா­ளர்­கள், பேநவ் மூல­ம் தங்­க­ளது ‘இ-வாலெட்’களில் பணம் நிரப்­ப­லாம்.

“சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கென வடி­வமைக்­கப்­பட்டு, உரு­வாக்­கப்­பட்ட புதிய கூகல் பே செயலி, பணம் செலுத்­து­வ­தில் எளி­தான, பாது­காப்­பான, உத­வி­க­ர­மான ஒட்­டு­மொத்த தீர்வை வழங்­கு­கிறது,” என்­றார் கூகல் பே செய­லி­யின் பொறி­யி­யல் இயக்­கு­நர் பேட்­ரிக் டே.

கூகல் பே செயலி பய­னா­ளர்­கள் கடை­களில் பொருள் வாங்­கும்­போது தொடர்­பில்லா வாசிப்­பான்­களில் தங்­க­ளது திறன்­பே­சி­யைத் தட்­டு­வ­தன்­மூ­லம் பணம் செலுத்த முடி­யும்.

அத்­து­டன், எம்­ஆர்டி, பேருந்­துப் பய­ணங்­க­ளுக்­கும் இணை­யத்­த­ளம் வழி­யாக பொருள் வாங்­கும்­போ­தும் கூகல் பே செயலி மூலம் பணம் செலுத்­த­லாம்.

இந்­தச் செயலி மூல­மாக கோல்­டன் வில்­லேஜ், ஷா திரை­ய­ரங்­கு­களில் திரைப்­பட நுழை­வுச்­சீட்­டு­களை வாங்­க­வும் இருக்­கை­களை முன்­ப­திவு செய்­ய­வும் முடி­யும்.

இந்­தி­யா­விற்கு அடுத்தபடியாக, புதுப்­பிக்­கப்­பட்ட கூகல் பே செய­லி­யைப் பயன்­ப­டுத்­தும் இரண்­டா­வது நாடு சிங்­கப்­பூர் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon