முழுமையான உடல்நலப் பாதுகாப்பு பற்றிய சிறப்புரை

பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, கொவிட்-19 காலத்தில் முழுமையான உடல் நலப் பாதுகாப்பு பற்றிய மருத்துவச் சிறப்புரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கொவிட்-19 காலகட்டத்தில் ஏற்படும் சவால்களால் நமது உடல் மற்றும் மனநலனை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்றும் மேலும் நோயில்லாமல் எப்படி வாழ்வது, நல்ல உணவுமுறைகள் என்னென்ன, எப்படி அமைதியான வாழ்க்கை வாழ்வது என்பது போன்ற ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் எழும் கேள்விகளுக்கு, இரு மருத்துவ நிபுணர்கள் தெளிவாக உரையாற்றி பதில் அளிக்க உள்ளனர்.

சென்னை Cardiac Wellness Institute-டின் நிறுவனரும் இருதய நல மருத்துவருமான டாக்டர் ப்ரியா சொக்கலிங்கம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர் அசோக்கா பாலகிருஷ்ணன் இருவரின் உரைகளுக்குப் பிறகு கேள்வி பதில் அங்கம் இடம்பெறும்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் அல்வின் டான் கலந்து கொள்வார்.

நாளை சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் ‘ஸூம்’ தொழில்நுட்பம் மூலமாக நடைபெறும் இந்த மருத்துவச் சிறப்புரை நிகழ்விற்கு அனுமதி இலவசம். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

Zoom Meeting எண்: 91230232428

கடவுச்சொல்: Wellness01

மேல் விவரங்களுக்கு:

ஜெகதீஷ் இளங்கோ - 90058127

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!