சிங்கப்பூர்-ஜப்பான் இடையே புதிய பயண முறை துவக்கம்

வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­கும் வர்த்­தக நிர்­வா­கி­கள் மற்­றும் நிபு­ணர்­க­ளுக்­கான ‘ரெசிடென்ஸ் டிராக்’ என்­னும் புதிய முறை பய­ணத்தை சிங்­கப்­பூ­ரும் ஜப்­பா­னும் தொடங்கி உள்­ளன.

நடப்­பில் இருக்­கும் பொது சுகா­தா­ரப் பாது­காப்பு நடை­மு­றை­க­ளு­டன் இது செயல்­ப­டுத்­தப்­படும் என்று சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்சு நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

‘ரெசிடென்ஸ் டிராக்’ பய­ணத்­துக்கு அடுத்த வாரம் புதன்­கி­ழமை முதல் விண்­ணப்­பிக்­க­லாம்.

இது தொடர்­பாக இரு நாடு­களும் கடந்த ஜூலை முதல் விவா­தித்து வந்­த­தாக அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை தொடங்­கப்­பட்ட தடை­யற்ற இரு­

த­ரப்­புப் பய­ணம் எனப்­படும் வர்த்­த­கத் தடத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக இந்­தப் புதிய பயண முறை தொடங்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஜப்­பா­னுக்­கும் இடை­யில் குறு­கிய கால அத்­தி­யா­வ­சிய வர்த்­த­கப் பய­ணம் மற்­றும் அதி­கா­ரத்­துவ பய­ணம் மேற்­கொள்ள வர்த்­த­கத் தடம் வழி­செய்­கிறது.

புதிய பய­ண­மு­றைக்­கான தகுதி, தேவைப்­படும் இதர அம்­சங்­கள், சுகா­தார நெறி­மு­றை­கள் மற்­றும் விண்­ணப்ப நடை­முறை ஆகி­யன குறித்த விவ­ரங்­கள் அடுத்த புதன்­கி­ழ­மைக்­குள் இரு நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சின் இணை­யத்­த­ளங்­க­ளி­லும் பதி­வேற்­றப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!