கட்டுமான ஊழியருக்கு மரணத்தை ஏற்படுத்திய கவனக் குறைவு: இரண்டு அதிகாரிகளுக்கு சிறை

மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்­னர் சாங்கி விமான நிலை­யத்­தில் நிகழ்ந்த கட்­டு­மான விபத்­தில் பங்­ளா­தேஷ் ஊழி­யர் மர­ண­ம­டைந்­த­தன் தொடர்­பில் இரண்டு மேற்­பார்வை அதி­கா­ரி­க­ளுக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஊழி­யர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தில் கவ­னக்­கு­றை­வாக நடந்­து­கொண்­ட­தற்­காக அவர்­கள் தண்­டிக்­கப்­பட்­ட­னர்.

வேலை­யி­டப் பாது­காப்பு மற்­றும் சுகா­தார அதி­கா­ரி­யாக பணி­யாற்­றிய டான் வீ மெங், 44, என்­ப­வ­ருக்கு இரு மாத சிறைத் தண்­ட­னை­யும் திட்ட மேலா­ள­ராக இருந்த லீ சுங் லிங், 48, என்­ப­வ­ருக்கு மூன்று மாத சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டன.

இவ்­விரு தண்­ட­னை­களும் வேலை­யிட பாது­காப்பு மற்­றும் சுகா­தா­ரச் சட்­டத்­தின்­கீழ் விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது.

சான் அண்ட் சான் என்­ஜி­னி­ய­ரிங் என்­னும் கட்­டு­மான நிறு­வ­னத்­தின் வேலை நடை­மு­றை­களில் உள்ள அபா­யங்­களை கண்­ட­றிந்து மதிப்­பி­டத் தவ­றி­ய­தா­க­வும் அபா­யங்­க­ளைக் குறைக்­கும் நட­வ­டிக்­கை­ளைப் பரிந்­து­ரைக்­கத் தவ­றி­ய­தா­க­வும் டான் வீ மெங் மீது குற்­றம் சாட்­டப்­பட்டு இருந்­தது.

அதே­போல இந்­நி­று­வ­னத்­தால் நிய­மிக்­கப்­பட்ட லீ சுங் லிங், கட்­டு­மா­னத்­த­ளத்­தின் வேலை நடை­மு­றை­களை மறு­ஆய்வு செய்­வ­தி­லும் தற்­கா­லிக உலோக அச்சு தயா­ரிப்பு நடை­மு­றைப் பணிக்­கான மேற்­பார்­வை­யா­ளரை நிய­மிப்­ப­தி­லும் கவ­னக்­கு­றை­வாக இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது.

இவர்­க­ளின் கவ­னக்­கு­றை­வால் மியா சலிம், 43, என்­னும் பங்­ளா­தேஷ் ஊழி­யர் 2017 மார்ச் 22ஆம் தேதி உயிரி­ழந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

உய­ர­ழுத்த கம்­பி­வட கட்­டு­

மா­னத்­துக்­கான உலோக அச்­சைப் பொருத்­தும் பணி­யில் ஈடு­பட்டு இருந்த அவர் சம்­ப­வம் நிக­ழும்­போது நிலத்­தடி குழி ஒன்­றி­னுள் இருந்­தார்.

அப்­போது உலோகத் தக­டு­க ளில் ஒன்று குழி­யு­னுள் விழுந்து சலி­மின் மார்­பைத் தாக்­கி­யது.

சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் அங்கு உயி­ரி­ழந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டார்.

முறையான நடைமுறைகள் சொல்லித்தரப்படாததால் ஊழியர் கள் அபாயத்தில் சிக்கும் நிலை இருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறி ஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட் டனர்.

தனது ஊழி­யர்­க­ளின் பாது­காப்­பை­யும் சுகா­தா­ரத்­தை­யும் உறு­தி­செய்­யக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கத் தவ­றி­ய­தற்­காக சான் அண்ட் சான் என்­ஜி­னி­ய­ரிங் கட்­டு­மான நிறுவனத்­திற்கு 2018 செப்­டம்­ப­ரில் $150,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அதி­கா­ரி­கள் இரு­வ­ரும் தங்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை கடந்த மாதம் 20ஆம் தேதி ஒப்­புக்­கொண்­ட­ பின்னர் புதன்கிழமை அவர்களுக்­கான தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!