பள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை

சிங்­கப்­பூ­ரில் பல மாண­வர்­க­ளுக்­குப் பாலி­யல் துன்­பு­றுத்­தல் இழைத்த பின்­னர் 17 ஆண்­டு­கள் தறை­ம­றை­வாக இருந்து தொடக்­கப் பள்ளி ஆசி­ரி­ய­ருக்கு நேற்று நீதி­மன்­றத்­தில் 10½ ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அந்த 56 வயது ஆட­வர் தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­ட­தைத் தொடர்ந்து தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது. மாண­வர்­க­ளான சிறு­வர்­களை மான­பங்­கம் செய்த மூன்று குற்­றச்­சாட்­டு­களும் குடி­நு­ழை­வுச் சட்­டத்­தின் கீழான ஒரு குற்­றச்­சாட்­டும் அவற்­றுள் அடங்­கும்.

மாண­வர்க­ளின் பாது­காப்­புக் கருதி அவ­ரைப் பற்­றிய விவ­ரங்­களோ அவர் பணி­யாற்­றிய பள்­ளி­யைப் பற்­றிய தக­வலோ வெளியி­டப்­ப­ட­வில்லை.

உடற்­கல்வி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய அவர் பாலி­யல் குற்­றங்­களில் ஈடு­பட்ட பின்­னர் இந்­தோ­னீ­சி­யா­வுக்­குத் தப்பி ஓடி­னார். இந்­தோ­னீ­சிய பாஸ்­போர்ட்­டைப் பெறு­வ­தற்­காக தமது பெயரை மாற்­றிக் கொண்­டார்.

அதன் மூலம் அவ­ரது அடை­யா­ளம் மாறி­யது. அந்­தப் புதிய அடை­யா­ளத்­தோடு 17 ஆண்டு கால­மாக சிங்­கப்­பூ­ருக்கு அவர் பல­முறை வந்து திரும்­பி­னா­லும் அண்­மை­யில் அதி­கா­ரி­க­ளி­டம் சிக்­கி­னார்.

சிறு­வர்­கள் மீது பாலி­யல் நாட்­டம் கொள்­ளத் தூண்­டும் பீடோ­ஃபி­லியா என்­னும் உள­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­வர் அந்த ஆட­வர் என்­றும் அத­னால் தனது குற்­றங்­களில் மீண்­டும் அவர் ஈடு­ப­டு­வ­தற்­கான ஆபத்து அதி­கம் என்­றும் அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் சுவா யிங்-ஹாங் வாதா­டி­னார்.

அத­னைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர் நீதி­பதி சலினா இஷாக் பேசும்­போது ஆட­வர் புரிந்த குற்­றங்­கள் கடு­மை­யா­னவை என்­றும் திட்­ட­மிட்டே அவர் குற்­றங்­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார் என்­றும் குறிப்­பிட்­டார். பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சிறு­வர்கள் என்­றும் அவர்­கள் தம் மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கைக்கு அவர் துரோ­கம் இழைத்­து­விட்­டார் என்­றும் நீதி­பதி தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!