காயங்கள் ஏற்படுத்திய விபத்து: என்டியு பேராசிரியருக்கு சிறை

காயங்கள் ஏற்படுத்திய விபத்து: என்டியு பேராசிரியருக்கு சிறை

1 mins read
25f75731-2afd-4241-9532-e45d3fe21031
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) துணைப் பேராசிரியர் லாவ் கிம் டீன். படம்: என்டியு -

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் மூலம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்குக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) துணைப் பேராசிரியருக்கு ஐந்து நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

லாவ் கிம் டீன், 61, எனப்படும் அவர் மலேசியர் என்றும் நிபுணத்துவ தொடர்கல்வி நிலையத்தில் பணிபுரிவதாகவும் என்டியு இணையத்தளம் தெரிவித்தது.

2018 டிசம்பர் 30ஆம் தேதி இரவு ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93க்கும் 92க்கும் இடையில் நடைபெற்ற விபத்தில் நரேஷ் பாலன், 24, என்னும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமுற்றார்.

அவரது உடலின் பல இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.