நிலைத்தன்மைமிக்க சிங்கப்பூருக்கான யோசனைகள் வரவேற்பு

பரு­வ­நிலை மாற்றம் தொடர்­பில் அதிக நட­வ­டிக்­கை­களை எடுக்க வலி­யு­றுத்­தும் புதிய மெய்­நி­கர் பிர­சா­ரத்தை சிங்­கப்­பூர் பரு­வ­நி­லைப் பேரணி இயக்­கத்­தின் இளம் ஏற்­பாட்­டா­ளர்­கள் தொடங்­கி­யுள்­ள­னர்.

‘#டேக்­பேக்2050’ என அழைக்­கப்­படும் அப்­பி­ர­சார இயக்­கத்­தின் வாயி­லாக நீடித்து நிலைக்­கத்­தக்க, பாகு­பா­டற்ற சிங்­கப்­பூரை உரு­வாக்கு­வ­தற்­கான யோச­னை­க­ளைத் தெரி­விக்­கும்­படி பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

பரு­வ­நி­லை­யில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்­தைக் குறைப்­ப­தற்கு ஆகும் செல­வு­கள் மட்­டு­மின்றி, அதில் உள்ள வாய்ப்­பு­கள் குறித்­தும் மக்­களைச் சிந்­திக்­கத் தூண்­டு­வ­தாக இந்­தத் தொலை­நோக்கு முயற்சி விளங்­கும் என்று ஏற்­பாட்­டா­ளர் டான் ஹெங் யெங், 24, நம்­பிக்கை தெரி­வித்­தார்.

“அர்ப்­ப­ணிப்பு தேவைப்­ப­ட­லாம் என்ற கவ­லை­யால், பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பில் உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்க மக்­கள் அஞ்சு­வ­தாக அடிக்­கடி நாங்­கள் கேள்­விப்­ப­டு­கி­றோம். அது வாழ்க்­கைத் தரத்தை மோச­மாக்­கி­வி­டும் என்று அவர்­கள் அச்­சப்­ப­டு­கின்­ற­னர். ஆனால், நாங்­கள் அதற்­குச் சவால் விடுக்க விரும்­பு­கி­றோம்,” என்­றார் கலை, கலா­சா­ரத் துறை­யில் பணி­பு­ரி­யும் குமாரி டான்.

பிர­சார அறி­முக நிகழ்­வை­யொட்டி, அர­சி­யல்­வா­தி­கள், கலை­ஞர்­கள், குடி­மைச் சமூ­கத் தலை­வர்­கள், சிங்­கப்­பூ­ரர்­கள் எனப் பல­ரும் சிங்­கப்­பூர் 2050ஆம் ஆண்­டில் எப்­படி இருக்­கும் என்­பது பற்­றிய தங்­கள் எண்­ணங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும் காணொளி ஒன்றை ‘சிங்­கப்­பூர் பரு­வ­நி­லைப் பேரணி’ குழு தனது சமூக ஊடகப் பக்­கங்­களில் பதி­வேற்­றம் செய்­து உள்­ளது.

செங்­காங் குழுத் தொகு­தி­யின் பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி ரயீசா கான், நடிகை ஊன் ஷு ஆன், 12 வய­தான பரு­வ­நிலைச் செயற்­பாட்­டா­ளர் ஆலி­வர் சுவா ஆகி­யோ­ரும் உரு­மாற்­றம் பெற்ற பொதுப் போக்­கு­வ­ரத்து அமைப்பு, அதி­க­மான சமூ­கச் சமத்­து­வம் உள்­ளிட்ட பல அம்­சங்­கள் குறித்த தங்­க­ளின் எண்­ணங்­களை அக்­கா­ணொளி வழி­யா­கப் பகிர்ந்து­கொண்­டுள்­ள­னர்.

பரு­வ­நி­லைச் செயல்­பாட்­டிற்­கான அனைத்­து­லக நாளை­யொட்டி இந்­தப் பிர­சார இயக்­கம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. மின்­னி­லக்­கப் பரு­வ­நி­லைச் செயல்­பாட்­டிற்­காக ‘ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்­சர்’ என்ற அனைத்­து­லக இளை­யர் பரு­வ­நிலை இயக்­கத்­தால் அந்த நாள் அறி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ருக்­காக தங்­க­ளின் தனிப்­பட்ட, புத்­தாக்க யோச­னை­களை https://www.sgclimaterally.com/takeback2050 என்ற இணை­யப்பக்­கம் வாயி­லா­கப் பொது­மக்­கள் தெரி­விக்­க­லாம்.

உரை­நடை, படங்­கள், கருத்­துப்­படங்­கள், காணொ­ளி­கள் அல்­லது ஒலிப்­ப­திவு போன்ற வழி­களில் அவர்­கள் தங்­கள் யோச­னை­க­ளைத் தெரி­விக்க ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றனர்.

வரும் நவம்­பர் மாத இறுதி வரை­யில் இந்­தப் பிர­சார இயக்­கம் நீடிக்­கும் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர். வந்து சேரும் யோச­னை­கள் தொகுக்­கப்­பட்டு, அமைச்­சர்­கள், அர­சாங்க அமைப்­பு­கள், பிற அதி­கா­ர­பூர்வ அமைப்­பு­கள் என உரி­ய­வர்­க­ளுக்கு அனுப்­பப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!