பழைய காலணிகளைக் கொண்டு விளையாட்டுத் திடல், ஓட்டத் தடம் அமைக்க புதிய பங்காளித்துவம்

பழைய கால­ணி­களை மறு­ப­ய­னீடு செய்து, பிற பணி­க­ளுக்­குப் பயன்­படுத்­தும் முயற்­சி­யாக ‘ஸ்போர்ட் சிங்­கப்­பூர் (ஸ்போர்ட்­எஸ்ஜி)’ அமைப்பு, ‘டவ்’ பொருள் அறி­வி­யல் நிறு­வ­னத்­து­டன் பங்­கா­ளித்­து­வம் செய்­து­கொண்­டுள்­ளது.

‘மற்­ற­வர்­க­ளுக்­குப் பழைய காலணி, எங்­க­ளுக்கு எதிர்­கா­லம்’ என அழைக்­கப்­படும் அத்­திட்­டம், பொது­மக்­க­ளி­டம் இருந்து 300,000 இணை கால­ணி­க­ளைப் பெற்று, அவற்றை ரப்­பர் துகள்­க­ளாக்கி, அவற்­றைக் கொண்டு அடுத்த மூன்­றாண்­டு­களில் மெது­வோட்­டத் தடங்­கள், உடற்­தி­றன் பகு­தி­கள், விளை­யாட்­டுத் திடல்­களை அமைக்க இலக்கு கொண்­டுள்­ளது.

“விளை­யாட்டு மூலம் நீடித்த நிலைத்­தன்மை என்ற பகிர்வு நாட்­டங்­களை ஊக்­கு­விப்­ப­தில், இந்­தப் பங்­கா­ளித்­து­வம் தொடர் விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இன்­னும் பல பங்­கா­ளி­களை ஈர்க்­கும் என நம்பு­கி­றோம்,” என்று ஸ்போர்ட்­எஸ்ஜி அமைப்­பின் தலைமை நிர்­வாகி லிம் டெக் யின் கூறி­னார்.

கடந்த ஆண்­டில் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட 161,000 டன் துணி, தோல் கழி­வு­களில் 4% மட்­டுமே மறு­சுழற்சி செய்­யப்­பட்­டது என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் புள்­ளி­வி­வ­ரம் குறிப்­பி­டு­கிறது.

“உரு­வாக்கி, பயன்­ப­டுத்தி, பின் வீசி­வி­டும் சமூ­கத்­தில் இருந்து, வேறு சமூ­கத்தை நோக்கி நாம் நகர்ந்து வரு­கி­றோம். அச்சமூ­கத்­தில் சுழற்­சித்­தன்மை என்­பது இன்­ற­ள­வி­லும் உகந்ததாக இருக்கும். ஆகை­யால், ஸ்போர்ட்­எஸ்ஜி, சமூ­கம் போன்ற பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து மதிப்­புக் கூட்­டல் நட­வடிக்­கை­களை மேற்­கொள்­வது மிக­வும் அவ­சி­யம்,” என்­றார் ‘டவ்’ நிறு­வ­னத்­தின் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத் தலை­வர் ஜோ பென்­ரைஸ்.

சுற்­றுச்­சூ­ழ­லில் நல்ல தாக்­கத்தை ஏற்­ப­டுத்த விரும்­பி­னால் அதற்கு நாம் அனை­வ­ரும் பங்­காற்ற வேண்­டும் என்று திரு ஜோ வலி­யு­றுத்­தி­னார்.

‘டவ்’ மற்­றும் அதன் வர்த்­த­கப் பங்­கா­ளி­யான ‘பி.டி. ஸ்போர்ட்ஸ்’ நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஆய்வு, உரு­வாக்க நிபு­ணர்­கள் குழு, ஆறு மாதங்­களில் ஒரு முழு­மை­யான செயல்­மு­றையை உரு­வாக்கி இருக்­கிறது.

அதன்­படி, கால­ணி­க­ளின் அடிப்­ப­கு­தி­யில் உள்ள ரப்­பர் பாகங்­கள், துகள்­க­ளாக அரைக்­கப்­பட்டு, பின் அவை விளை­யாட்டு உள்­கட்­ட­மைப்­பு­களை அமைக்­கப் பயன்­ப­டுத்­தப்­படும். இதன்­மூ­லம் மறு­சு­ழற்சி செய்­யப்­பட்ட டயர்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது குறை­யும்.

தண்­ணீரை மூலப்­பொ­ரு­ளா­கக் கொண்ட, கரைப்­பான் இல்­லாத கட்­டுத் தொழில்­நுட்­பத்­தின்­மூ­லம் அந்த ரப்­பர் துகள்­கள் பிணைக்­கப்­படும்.

சோதனை முயற்­சி­யாக, இப்­படி பழைய கால­ணி­களில் இருந்து பெறப்­பட்ட ரப்­பர் துகள்­க­ளைப் பயன்­ப­டுத்தி, இன்­னும் திறக்­கப்­படாத காலாங் காற்­பந்து மையத்­தில் 200 சதுர மீட்­டர் திடல் பரப்பு அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உல­கச் சுற்­றுச்­சூ­ழல் சுகா­தார நாளான இன்று தொடங்கி வரும் நவம்­பர் 30ஆம் தேதி வரை பழைய கால­ணி­கள் சேக­ரிப்பு இயக்­கம் இடம்­பெ­றும்.

ஆக்­டிவ்­எஸ்ஜி விளை­யாட்டு நிலை­யங்­கள், விளை­யாட்டரங்குகள், டெக்­கத்­லான், ஜேடி ஸ்போர்ட்ஸ் ஆகிய விளை­யாட்­டுச் சாத­னங்­கள் விற்­கும் கடை­கள் ஆகிய இடங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள 30 சேக­ரிப்பு முனை­களில், உலோ­கத் திரு­கா­ணி­கள் இல்­லாத கால­ணி­களை பொது­மக்­கள் போட்­டு­விட்­டுச் செல்­ல­லாம்.

பள்ளி மாண­வர்­களும் ஊழி­யர்­களும் தங்­க­ளது பழைய கால­ணி­களை முப்­ப­துக்­கும் மேற்­பட்ட கல்வி நிலை­யங்­களில் நன்­கொ­டை­யாக வழங்­க­லாம்.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு go.gov.sg/old-shoe-new-future என்ற இணை­யப்­பக்­கத்­தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!