உறவுக்கார சிறுமியை மானபங்கம் செய்த ஆடவருக்கு சிறை, பிரம்படி

உறவுக்கார சிறுமியை மானபங்கம் செய்த ஆடவருக்கு சிறை, பிரம்படி

1 mins read
ff57eaa9-1f8c-45d9-8bfe-9167543f3982
-

உடன் பிறந்­த­வ­ரின் மகளை பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்­திய 42 வயது ஆட­வ­ருக்கு மூன்­றாண்டு சிறை­யும் ஆறு பிரம்­ப­டி­களும் நேற்று தண்­ட­னை­க­ளாக விதிக்­கப்­பட்­டன.

இரு மான­பங்­கக் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் குழந்தை, இளம்­பிள்­ளை­கள் சட்­டத்­தின்­கீழ் ஒரு குற்­றச்­சாட்­டை­யும் அவர் எதிர்­நோக்­கி­னார்.

இதே­போன்ற இதர நான்கு குற்­றச்­சாட்­டு­கள் தண்­ட னை விதிப்­பின்­போது கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்ட சிறு­மி­யின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்­கும் வகை­யில் தண்­டிக்­கப்­பட்­ட­வ­ரைப் பற்­றிய விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை இக்­குற்­றச்­செ­யல்­கள் நிகழ்ந்­தன. பெற்­றோர் மண­வி­லக்­குப் பெற்­றுப் பிரிந்­து­விட்­ட­தால் தமது பாட்­டி­யின் பரா­ம­ரிப்­பில் சிறுமி இருந்­தார்.

பொங்­கோ­லில் உள்ள தமது மாமா­வின் வீட்­டுக்கு அவ்­வப்­போது செல்­லும் சிறுமி அங்­குள்ள விருந்­தி­னர் அறை­யில் தூங்­கு­வது வழக்­கம்.

அவ்­வாறு தங்கி இருந்­த­போது மாமா உற­வு­மு­றை­யில் இருந்த அந்த ஆட­வர் மான­பங்­கம் செய்­த­தா­க­வும் அவ­ரது முதல் குற்­றச்­செ­யல் சிறு­மி­யின் எட்டு வய­தி­லேயே தொடங்­கி­விட்­ட­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தமது மனை­வி­யும் மக­னும் தூங்­கிய பின்­னர் பக்­கத்து அறைக்­குச் சென்று சிறு­மி­யைச் சீண்­டு­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார்.

கிட்­டத்­தட்ட ஈராண்­டு­கள் நீடித்த தொல்­லை­யைப் பொறுக்­க­மு­டி­யாத சிறுமி, 2017 செப்­டம்­ப­ரில் தமது மாமா குறித்து போலி­சில் புகார் செய்­தார். தற்­போது சிறு­மி­யின் வயது 12.