புலாவ் உபின் தீவில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட ‘விரிவான உபின் பல்லுயிர்ப்பெருக்க ஆய்வின்’மூலம் அங்கு இருபது புதிய விலங்கினங்கள் இருப்பது பதிவுசெய்யப்பட்டு உள்ளது.
அவற்றுள் ‘பிராந்தஸ் எஸ்பி’ எனும் புதுவகை சிலந்தியினமும் அடங்கும். தீவின் கரையோரமாக உள்ள இரண்டாம் நிலைக் காடுகளில் அவ்வுயிரினம் கண்டறியப்பட்டது.
அத்துடன், சிங்கப்பூரில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஆறு உயிரினங்களையும் இதற்குமுன் புலாவ் உபினில் கண்டிராத 13 உயிரினங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
ஒன்பதாவது உபின் நாள் இன்று அனுசரிக்கப் படவுள்ள நிலையில், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆய்வு முடிவுகளை நேற்று வெளியிட்டார்.