கரையோர காவலுக்கு புதிய பயிற்சி மையம்

சிங்­கப்­பூர் கடற்­ப­கு­தி­யில் கள்­ளத்­த­ன­மாக ஊடு­ரு­வும் கலன்­களை அதி­வே­கத்­தில் விரட்­டிப் பிடிக்­கும் போலிஸ் கரை­யோ­ரக் காவற்­ப­டை­யின் நட­வ­டிக்­கை­யின்­போது எடுக்­கப்­படும் திடீர் முடி­வில்­தான் அந்த முயற்­சி­யில் வெற்றி கிட்­டுமா என்­பது தெரியவரும். அந்த முயற்­சி­யில் தோல்வி கிட்­டி­னால் அதன் விளை­வு­கள் பேரா­பத்­தாக முடி­யும். சிங்­கப்­பூர் கடற்­பகு­தி­யில் ஊடு­ரு­வி­கள் வெற்­றி­க­ர­மாக நுழைந்­தி­ருப்­பார்­கள் அல்­லது அதை­விட மோச­மாக போலிஸ் கரை­யோ­ரக் காவற்­ப­டை­யின் சொந்த கலன் கவிழ்ந்­தி­ருக்­கும்.

இப்­ப­டிப்­பட்ட அதிக ஆபத்­தான நட­வ­டிக்­கை­களில் சிறப்­பாக செயல்­பட போலிஸ் கரை­யோ­ரக் காவற்­படை தனது அதி­கா­ரி­க­ளுக்கு புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள தனது பாவ­னைப் பயிற்சி மையத்­தில் இவ்­வாண்டு மார்ச் மாதம் முதல் பயிற்­சி­களை அளித்து வரு­கிறது.

போலிஸ் கலன்­களைத் தந்­தி­ர­மாகக் கையா­ளு­தல் மற்­றும் குறி­சு­டும் பாவ­னைப் பயிற்சி முறை­யில் சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்ட நான்கு பாவ­னைப் பயிற்­சி­கள் உண்டு. அவற்­றில் இரண்டு, போலிஸ் கரை­யோ­ரக் காவற்­ப­டை­யின் கலன்­க­ளின் வழக்­க­மான இடை­மறிக்­கும் செயல்­மு­றை­க­ளைக் கொண்­டி­ருக்­கும்.

மற்ற இரண்டு, போலிஸ் கரை­யோ­ரக் காவற்­ப­டை­யின் கலன்­களின் அதி­வேக இடை­ம­றிக்­கும் செயல்­மு­றை­க­ளைக் கொண்­டி­ருக்­கும். இந்­தப் பாவ­னைப் பயிற்சி முறை உள்­து­றைக் குழு­வின் அறி­வி­யல், தொழில்­நுட்ப அமைப்­பின் ஒத்­து­ழைப்­பு­டன் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் பாவ­னைப் பயிற்­சி­கள் மணிக்கு 50 கடல்­மைல் வேகத்­தில் சம­த­ள­மில்­லாத வேகத்­தில் போலிஸ் கலன்­க­ளைப் பிர­தி­ப­லிக்­கும். 50 கடல்­மைல் வேகம் என்­றால் அது நிலத்­தில் மணிக்கு 92 கிலோ மீட்­டர் வேகத்­தில் செல்­வ­தற்கு ஒப்­பா­ன­தா­கும்.

பாவ­னைப் பயிற்­சிக் கூடத்­தில் பயிற்சி வீரர்­கள் கண்­கா­ணிப்பு மூக்­குக் கண்­ணா­டி­கள் அணிந்து, தங்­கள் கலன்­க­ளைக் கையா­ளு­தல் மற்­றும் குறி­சு­டும் ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­து­வார்­கள். பயிற்சி வீரர்­களின் ஆற்­றல்­களை அவர்­க­ளின் பயிற்­று­விப்­பா­ளர்­கள் தங்­கள் சொந்த செயல்­பாட்டு நிலை­யத்­தி­லி­ருந்து கண்­கா­ணிப்­பார்­கள்.

பயிற்சி வீரர்­க­ளின் திறன்­களைச் சோதிப்­ப­தற்­காக பயிற்­று­ விப்­பா­ளர்­கள் வெவ்­வேறு காட்சி­களை, கடல் நில­வ­ரங்­களை மற்­றும் ஒட்­டு­மொத்த பாவ­னைப் பயிற்­சிச் சுற்­றுச்­சூ­ழலை ஏற்­படுத்து­வார்­கள்.

போலிஸ் கரை­யோ­ரக் காவற்­படை­யின் பயிற்­சிப் பள்­ளி­யின் தலை­வ­ரான சூப்­ரின்­டென்­டண்ட் அகம்­மது பாஷா, இந்­தப் பயிற்சி முறை பயிற்சி வீரர்­க­ளுக்­குக் கடு­மை­யான கடல் சார்ந்த பயிற்­சி­களை அளிக்­கும் என்­றார். இந்­தப் பயிற்­சி­களை நேர­டி­யாக வழங்­கும்­போது, கலன்­கள் அதி­வே­கத்­தில் செல்­லு­கை­யில் வீரர்­க­ளின் பாது­காப்­புக்குப் பல்­வேறு அபா­யங்­கள் நிக­ழ­லாம் என்று திரு பாஷா, கடந்த வாரம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பாவ­னைப் பயிற்சி மையத்­தின் விளக்­கக் காட்­சி­யின்­போது விவ­ரித்­தார்.

“கட­லில் நேரடிப் பயிற்­சி­கள் நடக்­கும்­போது தவ­று­க­ளுக்கு இட­மில்லை. ஆக­வே­, பயிற்சி அதி­கா­ரி­கள் தங்­கள் திறன்­க­ளைப் பாவ­னைப் பயிற்­சிக் கூடத்­தில் மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம். அது அவர்­க­ளின் தன்­னம்­பிக்­கையை அதி­கப்­ப­டுத்­தும்,” என்­றார் திரு பாஷா.

“நேர­டிப் பயிற்­சி­யில் தேவைப்­படும் பயிற்­று­விப்­பா­ளர்­கள் எண்­ணிக்­கை­யை­விட பாவ­னைப் பயிற்சி­யில் குறை­வா­கவே தேவைப் ­படும். பாவ­னைப் பயிற்­சிக் கூடத்­தில் பல்­வேறு சூழ்­நிலை­களில் சரி­யாக செயல்­ப­டு­வது எப்­படி என்று வீரர்­கள் முழு­மை­யா­கப் பயிற்சி பெற்­ற­வு­டன், அவர்­கள் கட­லில் நேரடி செயல்­முறை பயிற்­சிக்குத் தயார் என்று பயிற்­று­விப்­பா­ளர்­கள் முடிவு செய்­வர்.

“அப்­போது அவர்­க­ளின் பாது­காப்பு உறுதி செய்­யப்­படும். அது அனை­வ­ருக்­கும் பாது­காப்­பாக அமை­யும்.” என்றார் திரு பாஷா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!