அலுவலகத்துக்கு மீண்டும் திரும்புவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன என்று கூறும் ஊழியர்கள்

இன்­னும் அதி­க­மான ஊழி­யர்­கள் தங்­கள் வேலை­யி­டங்­க­ளுக்­குத் திரும்­பு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டா­லும், அவ்­வாறு செய்­வ­தற்கு நிறு­வ­னங்­கள் பல சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது.ஊழி­யர்­கள் வேலை­யி­டத்­துக்­குத் திரும்­பு­வ­தற்கு அவர்­கள் பாது­காப்­பான தூர இடை­வெ­ளி­யில் அமர்­வ­தற்கு அலு­வ­ல­கத்­தின் அமைப்பு முறையை மாற்­றி­ய­மைக்க வேண்­டும்.

அலு­வ­ல­கத்­தில் இருக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு வெவ்வேறு வேலை நேரத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தும் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கும் என்று மனி­த­வள மேலா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். ஊழி­யர்­க­ளைப் பாதி நேரம் வீட்­டி­லும் பாதி நேரம் அலு­வ­ல­கத்­தி­லும் வேலை செய்ய வைப்­பது உற்­பத்­தித் திறனை வளர்க்­காது. ஒன்று வீட்­டி­லி­ருந்தோ அல்­லது அலு­வ­ல­கத்­தி­லி­ருந்தோ முழு நேர­மாக வேலை செய்ய வேண்­டும்,” என்­றார் ‘எங்­கேஜ்­ராக்­கெட்’ மனி­த­வள தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி திரு லியோங் சூ டுங்.

“தங்­கள் ஊழி­யர்­களை ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்­லது ஒரு வாரம் விட்டு ஒரு வாரமோ அலு­வ­ல­கத்­தில் வேலை செய்ய சில நிறு­வ­னங்­கள் ஏற்­பாடு செய்­ய­லாம். இரு வாரத்­துக்கு ஒரு முறை அலு­வ­ல­கத்­தில் வேலை செய்­வ­தில் ஒரு நன்மை உண்டு. ஒரு­வேளை ஒரு வாரத்­தில் ஊழி­யர் யாருக்­கா­வது கொவிட்-19 கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டால் அதற்கு அடுத்த வாரத்­தில் அனைத்து ஊழி­யர்­களுக்கும் வீட்­டி­லி­ருந்தே வேலை செய்­ய­லாம். இத­னால், ஊழி­யர்­க­ளி­டையே கிரு­மிப் பர­வல் தடுக்­கப்­ப­ட­லாம்,” என்­றார் மனி­த­வள நிபு­ணர்­கள் கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி திரு மயன்க் பாரேக்.

இது குறித்து சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக வர்த்­த­கப் பள்­ளி­யின் இணைப் பேரா­சி­ரி­யர் சோங் ஸாவ்லி கூறு­கை­யில், “வழக்­கத்­துக்கு மாறான நேரங்­களில் வேலை செய்­வது அதி­க­மான மன­வு­ளைச்­ச­லுக்கு இட்­டுச் செல்­லும்.

“கொவிட்-19 நிலை­மைக்கு முன் ஊழி­யர்­கள் வழக்­க­மான நேரத்­தில் வேலைக்­குச் சென்று வந்­த­னர். எப்­போது வேலைக்­குச் செல்­வது எப்­போது வீடு திரும்­பு­வது என்று அவர்­க­ளுக்­குத் தெரி­யும். ஆனால் இப்­போது, புதிய வேலை முறை­யால் எந்­தெந்த நாட்­களில் அலு­வ­ல­கத்­துக்­குச் செல்­ல­லாம் எப்­போது அங்­கி­ருந்து வீட்­டுக்­குத் திரும்­ப­லாம் என்று அறி­யாத குழப்­பத்­துக்கு ஊழி­யர்­கள் ஆளா­கக்­கூ­டும். இது­வும் மன­வு­ளைச்­சலை உண்டு பண்­ணும்,” என்­றார்.

“புதிய முறை­யில் வேலை செய்­வது பற்­றிய வெளிப்­ப­டை­யான மனப்­போக்கை நாம் பெற்­றி­ருக்க வேண்­டும். அரு­க­ருகே அமர்ந்து வேலை செய்­யும் முறையை கொவிட்-19 நிலைமை பல தொழில்­து­றை­களில் மாற்றிவிட்­டது.

“எங்­கள் நிறு­வ­னத்­தில் உள்ள ஒரு மாடி அலு­வ­ல­கத்­தில், காணொளி கருத்­த­ரங்கு, எளி­தில் மாற்­றி­ய­மைக்­கக்­கூ­டிய வேலைப் பகு­தி­கள், திறந்­த­வெளி உரை­யா­டல் இடங்­கள் என்று மாற்­றங்­கள் உள்­ள­டக்­கப்­பட்டு மறு­வ­டி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது,” என்­றார் கிரேட் ஈஸ்­டர்ன் காப்­பு­றுதி நிறு­வன மனி­த­வள மூல­த­னப் பிரி­வின் நிர்­வாக இயக்­கு­நர் திரு ஜேம்ஸ் லீ.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் சமூக ஊட­கப் பக்­கங்­களும் டெலி­கி­ராம் தள­மும் 7,100 பேரி­டம் நடத்­திய கருத்­தாய்­வில் பங்­கேற்ற 62 விழுக்­காட்­டி­னர் இந்த வாரத்­தி­லி­ருந்து வேலை செய்ய அலு­வ­ல­கத்­துக்­குத் திரும்­பும் யோச­னையை வர­வேற்­க­வில்லை என்று தெரி­வித்­த­னர்.

எங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதுதான் பிடித்துள்ளது

அலுவலகத்தில் வேலை செய்வதைவிட வீட்டிலிருந்து வேலை செய்வதுதான் தங்களுக்குப் பிடித்துள்ளது என்று மூவர் சண்டே டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

வேலைக்குச் செல்லும் பயணம் குறைந்துள்ளது

அவர்களில் ஒருவர் ‘க்ளூ’ எனும் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் கணக்கு நிர்வாகி திரு கோ வு சோங். காலையில் அவர் ஒரு மணிநேரம் கழித்து தூக்கத்திலிருந்து விழிக்கிறார். வழக்கமான வேலை நேரம் முடிந்தவுடன் கணினி விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்.

ஹவ்காங்கில் உள்ள அவரது வீட்டிலிருந்து அலுவலகம் இருக்கும் நகர மண்டபப் பகுதியில் உள்ள ஓடியன் டவர்ஸுக்குச் செல்ல 30 வயது திரு கோ, முன்பு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்வார்.

வேலைக்­குச் செல்­லும் இந்­தப் பயண நேரத்தை திரு கோ, வேலைக்­குப் பிந்­திய தனது பொழுது­போக்கு நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வார்.

தனது நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தா­லும் ஸூம் மெய்­நி­கர் கூட்­டம் மூலம் ஊழி­யர்­க­ளி­டம் பேசு­வ­தா­லும் ‘க்ளூ’ நிறு­வ­னம் வாட­கைக்கு எடுத்­துள்ள தனது அலு­வ­லக இடத்­தைக் குறைத்­துள்­ளது.

குடும்­பத்­து­டன் அதிக நேரம்

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தால் தமது குடும்­பத்­து­டன் அதிக நேரத்­தைச் செல­வ­ழிக்க முடி­கிறது என்று கூறு­கி­றார் கோஜெக் நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் தரவு அறி­வி­யல் நிபு­ண­ரான 26 வயது குமாரி மாள­விகா மேனன்.

கொவிட்-19 நிலை­மைக்கு முன், இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து, வியட்­னாம் ஆகிய நாடு­களில் விற்­கப்­படும் கோஜெக் நிறு­வ­னத்­தின் கோஃபூட் பொருட்­க­ளின் வடி­வங்­களைப் பரிந்­து­ரைக்­கும் பணி­யில் ஈடு­படும் மாள­விகா, அடிக்­கடி ஆய்­வுப் பணிக்­காக ஒரு வாரம் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று வந்­தார்.

இப்­போது வேலை­நே­ரம் போக அதிக நேரம் கிடைப்­ப­தால் மாள­விகா அவ்­வப்­போது சமை­யல் வேலை­க­ளைக் கவ­னிக்­கி­றார், இணை­யத்­தில் நெட்­ஃபி­ளிக்ஸ் தளம் மூலம் திரைப்­ப­டங்­க­ளைப் பார்க்­கி­றார், வீட்டு வேலை­க­ளைச் செய்ய உத­வி­யாக இருக்­கி­றார்.வீட்­டில் பெற்­றோர், தனது 24 வயது சகோ­தரி ஆகி­யோ­ரு­டன் மகிழ்ச்சி­யாக நேரத்­தைக் கழிப்­ப­தா­கக் கூறு­கி­றார் இவர்.

கவ­னத்­தைச் சிறப்­பாக ஒரு­முகப்­ப­டுத்த முடி­கிறது

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது ‘பிபிஏ ரோபோட்­டிக்ஸ்’ நிறு­வ­னத்­தில் மூத்த படைப்­பாக்க அதி­கா­ரி­யான 29 வயது குமாரி துளசி பன்­னீர்­செல்­வத்­துக்­குப் பிடித்­துள்­ளது.

“சில நேரங்­களில் எனது கவ­னத்தை ஒரு­மு­கப்­ப­டுத்த என் அறை­யில் இசையை அதிக அள­வில் ஒலிக்­கச் செய்­வேன். அதை எனது அலு­வ­ல­கத்­தில் செய்ய முடி­யாது. பிற்­ப­கல் ஒரு மணி­யி­லி­ருந்து இரண்டு மணி வரை மெய்­நி­கர் கூட்­டம் இருந்­தால், அதன் பிறகு பிற்­ப­கல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நான் எனது வடி­வ­மைப்­புப் பணி­யில் கவ­னம் செலுத்து­வேன்.

“அலு­வ­ல­கத்­தில் அதி­க­மா­னோ­ரு­டன் வேலை செய்­யும்­போது, கவ­னத்தை ஒரு­மு­கப்­ப­டுத்­து­வ­தில் சிர­மம் ஏற்­ப­ட­லாம்,” என்­றார் துளசி.

அலு­வ­ல­கத்­தை­விட வீட்­டில் இருந்து வேலை செய்­யும்­போது, வேலைக்­குப் பய­ணம் செய்­யும் நேரத்தை மற்ற வழி­களில் பயன்­படுத்­த­லாம் என்­கி­றார் ‘டெலி­கேட்’ எனும் இணைய விற்­ப­னைத்­த­ளத்­தில் வேலை செய்­யும் ஊழி­யர் குழுத் தலை­வ­ரான 32 வயது திரு­வாட்டி வனேசா மணி­கோன்.

“வீட்­டில் மேசைக் கணி­னி­யும் விசைப்­ப­ல­கை­­யும்தான் எனது பணிக்­கான கரு­வி­கள். மேலும் எனது அறை­ குளி­ரூட்­டி­யின் வெப்­ப­நி­லையை என்­னால் கட்­டுப்­ப­டுத்த முடி­யும். அது எனது வேலைக்­குச் சாத­க­மாக அமைந்­துள்­ளது,” என்­றார் வனேசா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!