டெஸ்மண்ட் லீ: விரைவில் தமிழிலும் கலந்துரையாடல்

ஒன்­றி­ணைந்து வலி­மை­யு­டன் மீண்­டெ­ழு­வ­தற்­கான சிங்­கப்­பூர் கலந்­து­ரை­யா­டல் தொடர் இது­வரை ஆங்­கில மொழி­யில் மட்­டுமே நடத்­தப்­பட்டு வரு­கிறது. விரை­வில் தமிழ், மாண்­ட­ரின், மலாய் ஆகிய மொழி­க­ளி­லும் அந்­நி­கழ்வு நடத்­தப்­பட உள்­ளது. இத்­து­டன் உடற்­குறை உள்­ளோ­ரும் கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கேற்க முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்து உள்­ளார்.

வலிமை பெற்று மீண்­டெ­ழு­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல் அனை­வ­ரை­யும் உள்­ள­டங்­கி­ய­தாக இருக்­கும் என்று வலி­மை­யு­டன் மீண்­டெ­ழு­வ­தற்­கான பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு லீ உறுதி அளித்­தார்.

“கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு தாமாக முன்­வந்து பதிவு செய்­யாத சமூ­கத்­தி­ன­ரைச் சென்­ற­டை­வ­தற்­கான வழி­வ­கை­கள் காணப்­படும். உடற்­கு­றை­யுள்­ளோரை பங்­கேற்­கச் செய்­யும் நட­வ­டிக்­கை­களும் அத­னுள் அடங்­கும்,” என்று அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் தெரி­வித்­தார்.

இது­போன்ற மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­டல் ஒன்று நிறை­வுற்ற பின்­னர் அவர் செய்­தி­யா­ள­ரி­டம் பேசி­னார்.

“கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கேற்­போ­ரி­டம் இருந்து யோச­னை­கள் பெறப்­பட்டு அவற்­றுக்­குச் செயல்­வ­டி­வம் தர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்,” என்­றார் அவர்.

கொவிட்-19 கொள்­ளை­நோ­யின் நீண்­ட­கா­லத் தாக்­கத்­தைச் சமா­ளிப்­ப­தில் சிங்­கப்­பூ­ருக்கு உத­வும் நோக்­கில் 17 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட வலி­மை­யு­டன் மீண்­டெ­ழு­வ­தற்­கான பணிக்­குழு கடந்த மே மாதம் அமைக்­கப்­பட்­டது.அதன் முதற்­கட்ட பரிந்­து­ரை­கள் அடுத்த ஆண்டு தொடக்­கத்­திற்­குள் வருங்­கா­லப் பொரு­ளி­யல் மன்­றத்­தி­டம் பகிர்ந்­து­கொள்­ளப்­படும்.

யோசனைகள், தீர்வுகள்: இந்திராணி ராஜா அழைப்பு

இதற்­கி­டையே, இக்­க­லந்­து­ரை­யா­டல்­களில் பகி­ரப்­படும் கருத்­து­களை அர­சாங்­கம் உன்­னிப்­பா­கக் கவ­னித்து வரு­வ­தாக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் தேசிய வளர்ச்சி, நிதி இரண்­டாம் அமைச்ச ரு­மான இந்­தி­ராணி ராஜா தெரி­வித்­தார். குறிப்­பாக, நடப்­பில் உள்ள கொள்­கை­ நி­லை­க­ளி­லி­ருந்து மாறு­பட்­டி­ருக்­கும் கருத்­து­கள் கவ­னிக்­கப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

“கருத்­து­க­ளுக்­குச் செவி­ம­டுத்து ஒரு­வ­ரோடு ஒரு­வரை கலந்து பேசச் செய்­யும் நடை­முறை முக்­கி­ய­மா­னது. ஒரு சமூ­க­மாக நாம் விரும்­பும் எதிர்­கா­லம் பற்­றிய பொது­வான புரிந்­து­ணர்வை அதன் மூலம் எட்­ட­லாம். கலந்து பேசு­வ­தோடு மட்­டும் நில்­லா­மல் யோச­னை­க­ளைத் தெரி­வித்து அவற்­றைச் செயல்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளி­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் பங்­கேற்க வேண்­டும் என அர­சாங்­கம் விரும்­பு­கிறது.

“செயல்பாட்டுக்கான கட்டமைப்பு கள் உருவாக்கப்படுவதால் யோச­னை­க­ளை­யும் தீர்­வு­க­ளை­யும் தெரி­விக்க பல­ரும் முன்­வ­ரு­வார்­கள் என எதிர்பாக்கிறோம்,” என்­றார் குமாரி இந்­தி­ராணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!