$100 பற்றுச்சீட்டின் பயன்பாடு குறித்து கேள்வி, விளக்கம்

சிங்­கப்­பூ­ரின் உள்­ளூர் பய­ணத் துறையை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் அறி­விக்­கப்­பட்ட $100 பயண பற்­றுச்­சீட்டு குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்தாள் பொது­மக்களிடம் பேசியது. சுமார் 25 பேர் பல்­வேறு சந்­தே­கங்­கள் குறித்து விளக்­கம் கேட்­ட­னர். அதற்கு அளிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் பதில் தரப்பட்டுள்ளது. இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­தத் தெரி­யா­தவர்கள் பற்­றுச்­சீட்டை பதி­வி­றக்­கம் செய்­வது குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இதற்­கான உதவி குறித்து தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் மின்­னி­லக்க அலு­வ­ல­கத்­து­ட­னும் மக்­கள் கழ­கத்­து­ட­னும் சிங்­கப்­பூர் பய­ணத்துறை இணைந்து பணி­யாற்­றும் என்­றும் விவ­ரங்­கள் கடி­தம் வாயி­லா­கத் தெரி­விக்­கப்­படும் என்­றும் பதில் அளிக்­கப்­பட்டு உள்­ளது. அநே­க­மாக அந்­தக் கடி­தம் நவம்­பர் மாதம் அனுப்­பப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மேலும், பற்­றுச்­சீட்­டின் செல்­லு­படி காலம் எப்­போது வரை என்று கேட்­கப்­பட்­ட­தற்கு, அடுத்த ஆண்டு ஜூன் வரை அதா­வது வரும் டிசம்­பர் தொடங்கி ஏழு மாதங்­க­ளுக்கு இதற்­கான திட்­டம் நடப்­பில் இருக்­கும் என்று விளக்­கப்­பட்டு உள்­ளது.

‘சிங்­கப்­பூ­ரீ­டிஸ்­க­வர்ஸ்’ என்­னும் அந்­தப் பற்­றுச்­சீட்டை உண­வ­கங்­க­ளி­லும் கடை­க­ளி­லும் பயன்­ப­டுத்­த­லாமா என்று ஒரு வினா­வும் வந்­துள்­ளது. குறைந்­த­பட்­சம் 30 விழுக்­காடு வெளி­நாட்­டி­னர் வருகை தரக்­கூ­டிய சுற்­றுப்­ப­ய­ணக் காட்­சி­க­ளுக்­கும் உரி­மம் பெற்ற ஹோட்­டல்­களில் அறை­களை பதிவு செய்­வ­தற்­கும் பற்­றுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்­த­லாம் என பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!