விற்பனை தொடங்கியதும் 60% விற்றுத் தீர்ந்த வீடுகள்

கொரோனா கொள்­ளை­நோய் நில­வ­ரத்­துக்கு இடை­யி­லும் புதிய வீடு­களை வாங்­கு­வ­தற்­கான ஆர்­வம் தணி­ய­வில்லை என்­பதை பென்­ரோஸ் கூட்­டு­ரிமை வீட்டு விற்­பனை உணர்த்­து­கிறது. வார இறு­தி­யில் தொடங்­கப்­பட்ட அதன் விற்­ப­னை­யில் 60.3 விழுக்­காடு விற்­பனை ஆகி­விட்­ட­தாக சிம்ஸ் டிரை­வில் உள்ள அந்­தக் கூட்­டு­ரிமை வீடு­களை நிர்­வ­கிக்­கும் ஹோங் லியோங் குழு­மம் தெரி­வித்து உள்­ளது.

மொத்­தம் விற்­ப­னைக்கு விடப்­பட்ட 566 வீடு­களில் 341 வீடு­கள் நேற்று மாலை 5 மணி வரை விற்­பனை ஆன­தாக அதன் அறிக்கை தெரி­வித்­தது. ஓரறை வீட்­டின் விலை $788,000 முதல் தொடங்­கி­யது. ஈரறை வீடு $943,000 என்­றும் மூவறை வீட்­டின் விலை $1.33 மில்­லி­யன் என்­றும் விற்­பனை ஆயின. அதே­போல நான்­கறை வீடு $2.11 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டது. ஓரறை வீட்­டின் பரப்­ப­ளவு 474 சதுர அடி­யி­லி­ருந்து தொடங்­கும். அதே­போல நான்­கறை வீட்­டின் அளவு 1,389 சதுர அடி என்­றது அறிக்கை.

சதுர அடியின் அடிப்படையில் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது. எல்லா வீடுகளின் விலை யும் ஒரு சதுர அடி $1,500 முதல் $1,700 வரை விற்கப்பட்டன. வார இறுதி விற்பனையில் பங்கேற்றவர் களில் சுமார் 85 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் என்றும் எஞ்சிய வர்கள் நிரந்தரவாசிகள் மற்றும் வெளிநாட்டினர் என்றும் ஹோங் லியோங் குழு­மம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!