தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகள்: பெற்றோர் உதவுவதற்கான யோசனைகள்

ஆண்­டி­றுதி பரு­வத் தேர்­வு­கள் தொடங்க இருக்­கும் வேளை­யில் அதற்­குத் தயா­ரா­கும் பிள்­ளை­க­ளி­டம் யதார்த்­த­மாக நடந்து­கொள்­ளு­மாறு பெற்­றோரை அனு­ப­வம்­பெற்ற கல்­வி­யா­ளர்­கள் கேட்­டுக்­கொண்டு உள்­ள­னர். இவ்­வாறு செய்­வ­தன் மூலம் பெற்­றோ­ருக்­கும் பிள்­ளை­க­ளுக்­கும் மன­உ­ளைச்­சல் குறை­வ­தோடு தேர்­வில் சிறந்த தேர்ச்­சி­யைப் பெற கைகொ­டுக்­கும் என்­கின்­ற­னர் அவர்­கள்.

அத்­து­டன், பிள்­ளை­க­ளுக்கு பெற்­றோர் எவ்­வாறு உத­வ­லாம் என்­ப­தற்­கான குறிப்­பு­கள் சில­வற்­றை­யும் அவர்­கள் தெரி­வித்து உள்­ள­னர். பாடங்­க­ளைத் திருப்­பிப் பார்ப்­ப­தற்­கான திட்­டத்தை வகுக்­கு­மாறு பிள்­ளை­க­ளைப் பெற்­றோர் கேட்­டுக்­கொள்­ள­லாம். அதன் மூலம் பிள்­ளை­யின் பலம், பல­வீ­னத்­தைப் புரிந்­து­கொண்டு தேர்ச்­சிக்­கான இலக்கை நிர்­ண­யிக்க உத­வும் என தேசிய கல்­விக் கழக விரி­வு­ரை­யா­ளர் சாண்ட்ரா ஊ தெரி­வித்­தார்.

ஒரு மாண­வ­ரின் படிப்பு, ஓய்வு, உணவு மற்­றும் விளை­யாட்டு ஆகி­ய­வற்­றுக்­கான நேரத்தை சம­மாக ஒதுக்குவதே தேர்­வுக்­குப் படிப்­ப­தற்­கு­ரிய சரி­யான அட்­ட­வ­ணை­யாக அமை­யும் என்­றும் இதன் மூலம் ஒட்­டு­மொத்த பதற்­றத்­தைத் தணிக்க அது உத­வும் என்­றும் அவர் கூறி­னார். இத்­து­டன், படிப்­ப­தற்­கான நல்ல சூழல், போது­மான உடற்­ப­யிற்சி மற்­றும் சிறந்த சத்­து­ணவு ஆகி­ய­ன­வும் அவ­சி­யம் என்­றார் டாக்­டர் ஊ.ஆண்டு முழு­மை­யும் நடத்­தப்­பட்ட பாடங்­களை திருப்­பிப் பார்க்­கும் பணியை சுல­ப­மாக்­கும் யோச­னையை ஒன்­சான்டா என்­னும் இணை­யக் கற்­றல் தளத்­தின் நிறு­வ­னர் கூ யி சியான் தெரி­வித்­துள்­ளார்.

பாடத் தலைப்­பு­கள் அல்­லது செயல்­களை பட்­டி­ய­லிட்டு அவற்­றைச் செயல்­ப­டுத்­தும் வகை­யில் சின்­னச் சின்ன பகு­தி­க­ளா­கப் பிரிக்­க­லாம் என்­றார் அவர். சில பாடங்­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தில் பிள்­ளை­கள் சிர­மப்­பட்­டால் அதற்­காக அவர்­களை பெற்­றோர் திட்­டக்­கூ­டாது என்­றும் திரு கூ கூறி­னார். பல­த­டவை சொல்­லித் தந்த பின்­ன­ரும் பிள்­ளை­கள் புரிந்­து­கொள்­ளா­விட்­டால் பெற்­றோ­ருக்கு எரிச்­சல் வரு­வது இயல்­பு­தான் என்­றும் அந்த எரிச்­சலை வெளிக்­காட்­டிக் கொள்ள வேண்­டாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பாடங்­களை முழு­மை­யா­கத் தெரிந்து வைத்­தி­ருக்­கி­றார்­களா என்­ப­தைச் சோதித்து அறிய பிள்­ளைகளை ஓர் ஆசி­ரி­யர் போல செயல்­பட வைக்­க­லாம் என்று திரு­வாட்டி மோனிகா லியோங் கூறு­கி­றார்.

பாடங்­களில் இருந்து சில கேள்­வி­க­ளைத் தயா­ரித்து அவற்­றுக்­கான விடை­யை­யும் விளக்­கத்­தை­யும் ஓர் ஆசி­ரி­ய­ரைப்­போல சொல்­லு­மாறு பிள்­ளை­க­ளைக் கேட்­டுக்­கொள்­ள­லாம் என்­கி­றார் ‘சூப்­பர்ஸ்­டார் டீச்­சர்’ என்­னும் இணை­யக் கற்­றல் தளத்­தின் கல்­விக் குழு தலை­வ­ரான திரு­வாட்டி மோனிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!