சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி

சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லிய கடற்ப­டை­யி­னர் தங்­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்­புப் பயிற்­சியை நேற்று முன்­தி­னம் தொடங்­கி­னர்.‘எக்­சர்­சைஸ் சிங்­காரு’ என்­னும் அந்­தக் கூட்­டுப் பயிற்சி தென்­சீ­னக் கட­லின் தெற்கு வட்­டா­ரத்­தில் தொடங்­கி­யது. இது இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான 25 வது ஆண்டு கடற்­ப­யிற்சி.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக இரு நாட்­டுப் படை­யி­ன­ரும் நேருக்கு நேர் சந்­தித்­து பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வது தவிர்க்­கப்­பட்டு உள்­ள­தாக சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது. பயிற்­சி­யின்­போது இரு நாட்டு கடற்­ப­டை­யி­ன­ரும் துப்­பாக்­கி சுடு­தல், தந்­தி­ர­மு­றைப் பயிற்சி, நீருக்­க­டி­யி­லான பயிற்சி, ஆகாய தற்­காப்­புப் பயிற்சி, தக­வல் தொடர்பு பயிற்சி, போர்த்­தி­றன் பயிற்சி போன்­ற­ நடவடிக்கைகளில் ஈடு­ப­டு­வர்.

இன்று திங்­கட்­கி­ழ­மை­யு­டன் முடி­வு­றும் பயிற்­சிக்கு சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை மூன்று விமா­னங்­க­ளைத் தந்து உத­வும்.

“எக்­சர்­சைஸ் சிங்­காரு என்­பது சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லிய கடற்­ப­டை­யி­ன­ருக்கு இடை­யி­லான பய­னுள்ள தள­மாக விளங்­கு­கிறது.

“கடல், கட­லடி, ஆகாயம் ஆகி­ய­வற்­றிற்கு இடை­யி­லான உயர்­மட்ட பயிற்­சி­களை மேற்­கொள்ள இது வழி­வகை செய்­கிறது,” என்று சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­படை அதி­காரி ஹோ ஜீ கியன் கூறி­னார்.

“இந்த 25வது ஆண்டு பயிற்­சி­யைத் தொடர்ந்து இரு நாட்டு கடற்­ப­டை­க­ளுக்­கும் இடை­யி­லான அணுக்க ஒத்­து­ழைப்­பும் தோழ­மை­யும் இனி வரும் பல்­லாண்­டு­க­ளி­லும் தொட­ரும் என எதிர்­பார்ப்­போம்,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!