சுடச் சுடச் செய்திகள்

சிராங்கூன் ரோடு வட்டாரத்தில் கொள்ளை: இன்று குற்றச்சாட்டு

கொள்­ளை­யில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின் பேரில் 34 வயது ஆட­வர் ஒரு­வர் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டார்.

கொள்­ளைச் சம்­ப­வம் வெள்­ளிக்­கி­ழமை பிற்­ப­க­லில் நடை­பெற்­றது. சிராங்­கூன் ரோடு அருகே உள்ள ஓவன் ரோட்­டில் 75 வயது முதி­ய­வர் ஒரு­வர் தாக்­கப்­பட்டு கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­ட­தாக தங்­க­ளுக்கு புகார் வந்­த­தென போலி­சார் கூறி­னர்.

முதி­ய­வ­ரி­ட­மி­ருந்து நகை­களும் கைபே­சி­யும் பறிக்­கப்­பட்­ட­தாக அப்­பு­கா­ரில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் கூறி­னர். தீவிர விசா­ர­ணைக்­குப் பின்­னர் ஹவ்­காங் அவென்யூ 1ல் சந்­தேக நபர் பிடி­பட்­டார்.

காயம் ஏற்­ப­டுத்தி கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்­ட­தாக அவர் மீது இன்று திங்­கட்­கி­ழமை நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படும்.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஐந்­தாண்டு முதல் 20 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் பிரம்­ப­டி­யும் ஆட­வ­ருக்கு விதிக்­கப்­ப­ட­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon