குடி­நு­ழைவு, சோத­னைச்­சாவடி புதிய சேவை: இணையம் வழி முகவரி மாற்றம்

சிங்­கப்­பூ­ரில் அக்­டோ­பர் 1 முதல் புதிய குடி­நு­ழைவு, சோத­னைச்­சாவடி இணையச் சேவை (e-Service) அறிமுகமாகிறது. அந்தச் சேவை­யைப் பயன்­ப­டுத்தி மக்­கள் தங்­கள் உள்­ளூர் மற்­றும் வெளி­நாட்டு குடி­யி­ருப்பு முக­வ­ரி­களை மாற்­றிக்கொள்­ள­லாம்.

முக­வ­ரியை மாற்ற விரும்­பு­வோர் அக்­கம்­பக்க போலிஸ் சாவடிக்கோ அக்­கம்­பக்க போலிஸ் நிலை­யத்­திற்கோ டிசம்­பர் 1 முதல் செல்ல முடி­யாது.

விண்­ணப்­ப­தா­ரர்­கள் தங் களுடைய சிங்­பாஸ் மூலம் இந்த ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் இந்­தச் சேவை­யைப் பயன்­படுத்­திக்கொள்­ள­லாம்.

இப்­ப­டிச் செய்­வோ­ருக்கு மூன்று முதல் ஐந்து நாட்­க­ளுக்­குள் அஞ்­சல் மூலம் புதிய முக­வ­ரிக்கு ரக­சிய எண் ஒன்று அனுப்­பப்­படும்.

அந்த எண்­ணைப் பயன்­ப­டுத்தி புதிய முக­வ­ரியை உறு­தி­செய்­யும்­படி விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுக்­கப்­படும். அவர்­கள் அப்­படி செய்­த­தும் அதற்­கான உறு­திக் கடி­தம் அனுப்பி வைக்­கப்­படும். பிறகு புதிய முக­வரி ஒரு நாளில் எல்லா அர­சாங்க அமைப்­பு­க­ளின் கணி­னித் தக­வல் வளங்­களில் சேர்க்­கப்­படும்.

புதிய முக­வ­ரி­யைத் தெரி­விக்­கும் ஒட்­டுத் தாள் ஒன்­று­டன் கூடிய இரண்­டா­வது கடி­தம் விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு வரும். அதில் கண்ட வழி­முறைக­ளைப் பின்­பற்றி அவர்­கள் தங்­கள் அடை­யாள அட்­டைக்­குப் பின்­பு­றத்­தில் அந்த முக­வ­ரித் தாளை ஒட்­டிக்­கொள்ள வேண்­டும்.

தேசிய பதி­வுச் சட்­டத்­தின்­படி அடை­யாள அட்டை வைத்­தி­ருப்­போர் அனை­வ­ரும் முக­வரி மாற்­றத்­தைப் பற்றி 28 நாட்­க­ளுக்­குள் அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­யப்­ப­டுத்­தி­விட வேண்­டும்.

குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் தொடங்கி இருக்­கும் புதிய இணை­யச் சேவை தமிழ், ஆங்­கி­லம், மாண்­ட­ரின், மலாய் ஆகிய நான்கு மொழி­க­ளி­லும் கிடைக்­கும்.

இந்­தச் சேவை­யைப் பயன்­படுத்­திக்கொள்ள முடி­யா­த­வர்­கள் உத­விக்­காக இந்த ஆணை­யத்தை அணு­க­லாம். புதிய சேவையை யாரா­வது தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­னால் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!