சுடச் சுடச் செய்திகள்

பணிப்பெண்ணுக்கு கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கப்பூர் மாது

இந்தோனீசியாவைச் சேர்ந்த குமாரி சுலிஸ் சத்யாவதி, 24, என்ற பணிப்பெண்ணை முகத்தில் அறைந்து, முடியைப் பிடித்து இழுத்து திரும்பத் திரும்ப கொடுமைப்படுத்தியதாக சிங்கப்பூரரான 31 வயது மாது ஒருவர் ஒப்புக்கொண்டார்.

நூர் அடாடி யூசோஃப் என்ற அந்த மாதின் வீடு ஈசூனில் இருக்கும் புளோக் ஒன்றில் 15வது மாடியில் இருந்தது. அவர் 2018 ஜனவரிக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடையில் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தினார்.

அவரிடம் இருந்து தப்பிக்க பணிப்பெண் 15வது மாடி முகப்பு (பால்கனி) வழியாக கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். ஆறு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள அந்த மாதுக்கு நவம்பர் 18ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

அப்போது இதர 9 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இப்போது அவர் $10,000 பிணையில் இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon