ஆதரவு திரட்டி மக்களுக்கு உதவும் ஐந்து வட்டார மேயர்கள்

மக்­க­ளுக்­காக திட்­டங்­களை அறி­விக்­கும்­போது அவற்றுக்கு பல வளங்­கள் தேவைப்­படும். அதற்கு ஏது­வாக சிங்­கப்­பூ­ரின் ஐந்து வட்­டா­ரங்­க­ளின் மேயர்­கள் பல்­வேறு வழி­க­ளி­லி­ருந்து வளங்­க­ளைத் திரட்டி, தங்­கள் வட்­டா­ரத்­துக்கு உட்­பட்­டி­ருக்­கும் தொகு­தி­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கு­கி­றார்­கள்.

மக்­க­ளின் தேவை­கள் என்ன என்­பதை அறிந்து, அதற்­கான தீர்­வு­களை உட­ன­டி­யாக அறி­விக்­கி­றோம் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்கு அளித்த நேர்­கா­ண­லில் ஐந்து வட்­டார மேயர்­களும் தெரி­வித்­த­னர்.மத்­திய சிங்­கப்­பூர் வட்­டார மேயர் டெனிஸ் புவா, தென்­மேற்கு வட்­டார மேயர் லோ யென் லிங், வட­கி­ழக்கு வட்­டார மேயர் டெஸ்­மண்ட் சூ ஆகி­யோர் மீண்­டும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தென்­கி­ழக்கு வட்­டார மேயர் ஃபாமி அலி­மா­னும் வட­மேற்கு வட்­டார மேயர் அலெக்ஸ் யாமும் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள்.

“மேயர்­க­ளின் பணி பற்­றி­யும் சமூக மேம்­பாட்டு மன்­றங்­க­ளின் (சிடிசி) பணி பற்­றி­யும் மக்­க­ளிடையே பல கேள்விகள் எழு கின்றன.

“முத­லில், குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் தேவை­களை மேயர்­கள் கண்­ட­றி­கி­றார்­கள். பின்­னர் பல வழி­க­ளி­லி­ருந்து வளங்­க­ளைத் திரட்­டு­வ து­டன் பங்­கா­ளி­களாகத் திகழும் பெரிய நிறுவனங்கள், சமூக சேவை அமைப்­பு­கள், இதர அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­றின் கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். அதன் பிறகு, மக்­க­ளின் தேவை­க­ளுக்­கேற்ப திட்­டங்­களை அமல்­ப­டுத்­து­கின்­ற­னர்,” என்­றார் திரு­வாட்டி டெனிஸ் புவா.

“அடித்­தள மக்­க­ளுக்கு உள்ள தேவை­களை அறிந்­து­கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் எப்­ப­டிப்­பட்ட வளங்­க­ளைத் திரட்­ட­லாம் என்ற பர­ந்த கண்­ணோட்­டத்­தைப் பெற முடி­யும்.

“உதா­ர­ணத்­துக்கு, பகு­தி­நேர வேலை­க­ளைச் செய்­து­கொண்­டி­ருந்த உயர்­கல்வி மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 காலத்­தில் வேலை இல்­லா­மல் போய்­விட்­டது. இந்­தத் தேவை­களை அறிந்து உட­ன­டி­யாக தீர்வு நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தோம். பிரச்­சி­னை­களை அறிந்து, அதை மதிப்­பீடு செய்து, எவ்­வ­ளவு தொகை தேவைப்­படும் என்­ப­தைக் கணக்­கிட்டு, பின்­னர் திட்­டத்தை அமல்­ப­டுத்த குறைந்­தது ஆறு வாரங்­கள் பிடித்­தன,” என்­றார் இரண்­டாம் முறை­யாக மேய­ரா­கப் பொறுப்­பேற்­றி­ருக்­கும் திரு டெஸ்­மண்ட் சூ.

வட­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றத்­தின் உயர்­கல்வி மாண­வர்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து உத­வித் திட்­டத்­துக்­குத் தகுதி பெறு­வோ­ருக்கு $150 முதல் $300 வரை கிடைக்­கும்.

சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் 1997ஆம் ஆண்­டில் முத­லில் தொடங்­கப்­பட்­ட­போது, அவை சமூக மற்­றும் வேலை வாய்ப்பு உத­வி­களை மட்­டுமே செய்து வந்­தன என்­றார் திரு­வாட்டி லோ.

“பின்­னர் இந்­தப் பணி­கள் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு மற்­றும் சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு (இது முன்­னர் சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி மேம்­பாட்டு அமைப்பு என்று அழைக்­கப்­பட்­டது).

“சமூக மேம்­பாட்டு மன்­றங்­க­ளின் சில அம்­சங்­கள் இன்­னும் மாறா­மல் உள்­ளன. சார்ஸ், உலக பொரு­ளி­யல் நெருக்­கடி போன்ற நெருக்­கடி காலத்­தில் உட­ன­டி­யாக உதவி நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தல், உள்­ளூர் மக்­க­ளி­ட­மி­ருந்து ஆத­ரவு திரட்­டு­தல் போன்­றவை இன்­னும் மாறா­மல் இருக்­கின்­றன.

“மேலும், பல கலா­சார, பல இன சிங்­கப்­பூ­ரில் சமூக பிணைப்பை வலுப்­ப­டுத்­து­தல், தங்­கள் வட்­டா­ரத்­தில் பாதிப்­புக்­குள்­ளா­கும் குடும்­பங்­க­ளுக்கு சமூக திட்­டங்­களை அறி­வித்­தல் ஆகி­ய­வற்­றி­லும் மாற்­ற­மில்லை என்று திரு­வாட்டி லோ. விவ­ரித்­தார்.

“தேவை ஏற்­பட்­டால், சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் ஒவ்­வொன்­றும் தனது சொந்த திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும். சிடிசி பற்­றுச்­சீட்டு திட்­டம், கொவிட்-19 காலத்­தில் மாண­வர்­க­ளுக்­கான உண­வுத் திட்­டம் போன்ற தேசிய அள­வி­லான திட்­டங்­கள் அம­லா­கும்­போது ஐந்து மன்­றங்­களும் ஒன்று சேர்ந்து பணி­யாற்­றும்.

“தங்­க­ளுக்கு உள்ள நீக்­குப்­போக்­கான செயல்­மு­றை­யால், அர­சாங்­கம் வழங்­கும் தேசிய அள­வி­லான உத­வித் திட்­டங்­கள் செயல்­படுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தா­கவே சிடிசி மன்­றங்­கள் உதவி நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்த முடி­கிறது. இருப்­பி­னும், மக்­க­ளின் வரிப்­ப­ணம் இதில் அடங்­கி­யி­ருப்­ப­தால் திட்­டங்­கள் கவ­ன­மா­கச் செயல்­படுத்­தப்­படு­கின்­றன என்று விளக்­கி­னார் மேயர் குழு­வுக்­குத் தலை­மை­யேற்­கும் திரு­வாட்டி லோ.

“நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அடித்­தள ஆலோ­ச­கர்­கள், அமைச்­சு­கள், இதர உத­விக் குழுக்­கள் ஆகி­ய­வற்­றுக்கு மாற்­றாக மேயர்­களும் சமூக மேம்­பாட்டு மன்­றங்­களும் செயல்­ப­டு­வ­தில்லை.

“மாறாக, அவற்­றின் திட்­டங்­க­ளுக்கு திரைக்­குப் பின்­னால் இருந்து ஆத­ரவு மற்­றும் இணைப்­புக் கரத்தை சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் நீட்­டு­கின்­றன,” என்­றார் திரு­வாட்டி புவா.

“நான் முதல் முத­லில் சமூக மேம்­பாட்டு மன்­றத்­தில் நுழைந்­த­போது, எனது தொகு­தி­யின் பங்கு­தா­ரர்­க­ளு­டன் எவ்­வாறு தொடர்பை ஏற்­ப­டுத்திக்கொள்வது என்று நினைத்­தேன். ஆனால் இங்கு அதற்­கு­ரிய அனைத்து தக­வல்­களும் உள்­ளன. அவர்­கள் பங்­கு­தா­ரர்­கள், பெரு­நி­று­வ­னப் பங்­கா­ளி­கள், பள்­ளி­கள், சேவை­ அமைப்புகள் என்று அனை­வ­ரு­டனும் வலு­வான பிணைப்­பைக் கொண்­டுள்­ள­னர்,” என்­றார் முதல் முறை­யாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்வு பெற்­றி­ருக்­கும் திரு ஃபாமி.

“சமூக மேம்­பாட்டு மன்­றங்­கள் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­வ­தில் சிறந்து விளங்­கு­கின்­றன. அடித்­தள மக்­க­ளுக்கு வளங்­களை அளித்து உத­வு­தல், பங்­கா­ளித்­துவ அமைப்பு களு­டன் கொண்­டுள்ள வலு­வான பிணைப்­பைக் கட்­டிக்­காத்­தல் போன்­றவை அவற்­றில் அடங்­கும்.

“சமூக மேம்­பாட்டு மன்­றங்­களின் உத­வித் திட்­டங்­கள் யாவை என்று மக்­கள் அறிந்­தி­ராத நிலை ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் நாங்­கள் கவ­ன­மாக செயல்­ப­டு­கி­றோம்,” என்­றார் திரு யாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!