பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 32 பேருக்கு அபராதம்

பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 32 பேருக்கு அபராதம்

1 mins read
a82a3fd4-4456-4d38-8251-65232c7b7492
-

கிருமித்தொற்றை எதிர்கொள்வதற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளை உணவகங்களில் இருந்தபோது மீறிய குற்றத்துக்காக 32 பேருக்கு தலா $300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாப்பிட்டதும் முகக்கவசத்தை அணிய வேண்டும், ஒரு மேசையில் அதிகபட்சம் ஐந்து பேர் இருக்க வேண்டும், மற்ற மேசைகளில் இருப்போருடன் தொடர்பில் இருக்கக்கூடாது போன்ற விதிமுறைகள் நடப்பில் உள்ளன.

இவற்றை அந்த 32 பேரும் மீறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விதிமுறையை மீறிய மேலும் எட்டு உணவங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. 14 உணவங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தகவலை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று வெளியிட்டது.

உணவகங்களில் இரவு 10.30 மணிக்குப் பிறகு மதுபானம் விற்கக்கூடாது. அதுமட்டுமல்லாது, இரவு 10.30 மணிக்குப் பிறகு உணவகங்களில் வாடிக்கையாளர்கள் மது அருந்தக்கூடாது. இந்த விதிமுறைகளைச் சில உணவகங்கள் மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.