சுடச் சுடச் செய்திகள்

தொலைக்காட்சிக் கட்டணம்: நிறுவனங்களிடையே போட்டி

சிங்கப்பூரில் தொலைக்காட்சி ஒளிவழிகளுக்கான மாதாந்திர கட்டணம் வசூலிக்கும் சிங்டெல், ஸ்டார்ஹப் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறையக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனம் ‘ஃபிட்ச் சொலுஷன்ஸ்’ தெரிவித்துள்ளது.

2029ஆம் ஆண்டிற்குள் தொலைக்காட்சிக் கட்டணம் செலுத்தும் 460,660 சந்தாதாரர்கள் இருப்பர் என அது முன்னுரைத்தது. ஒப்புநோக்க, கடந்த ஜூன் மாத இறுதியில் 704,000 சந்தாதாரர்கள் இருந்தனர். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கு 968,000 சந்தாதாரர்கள் இருந்தது நினைவுகூரத்தக்கது.

‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘எச்பிஓ கோ’, ‘அமேசான் பிரைம் வீடியோ’, போன்ற தளங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் போட்டியைத் தருகின்றன.

சிங்கப்பூரில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் எத்தனை சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. என்றாலும், சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஸ்டடிஸ்டா’, இவ்வாண்டு இறுதிக்குள் இங்கு 264,000க்கும் அதிகமான ‘நெட்ஃபிளிக்ஸ்’ பயனாளர்கள் இருப்பர் என்று கணிக்கிறது.

சிங்கப்பூர் சந்தைக்குள் ‘நெட்ஃபிளிக்ஸ்’ நுழைந்த 2016ஆம் ஆண்டில் அதனிடம் 47,000 சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர்.

இந்நிலையில், இழந்த வாடிக்கையாளர்களைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் ஈர்ப்பது சவாலான ஒன்று என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon