மோசடிகளால் $749,000 பறிகொடுத்த நிறுவனங்கள்

ஆகஸ்ட் மாதத்­தில் இருந்து கொள்­மு­தல் ஆணை மோசடி தொடர்­பில் 11 புகார்­கள் வந்­த­தா­க­வும் $749,000 மதிப்­புள்ள பொருட்­கள் மோசடி செய்­யப்­பட்டு இருப்­ப­தா­க­வும் போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

மோச­டிக்­கா­ரர்­கள் அர­சாங்க அமைப்­பு­கள் மற்­றும் உள்­ளூர் பல்­

க­லைக்­க­ழ­கங்­க­ளைப் போல போலி­யாக செயல்­பட்டு நிறு­வ­னங்­களை ஏமாற்­றி­ய­தா­கத் தெரிய வந்­துள்­ளது.

பொருட்­களை வாங்­கு­வ­து­போல பாசாங்கு செய்­யும் மின்­ம­டல்­களை மோச­டிக்­கா­ரர்­கள் அனுப்­பு­வார்­கள்.

மின்­னி­யல் பொருட்­கள், தக­வல் தொழில்­நுட்­பம் தொடர்­பான சாத­னங்­கள் ஆகி­ய­வற்­றோடு ஒளிக்­கற்றை படக்­க­ரு­வி­கள் தொடங்கி இத­யத்­து­டிப்பு மீட்பு சாத­னம் வரை­யி­லான மருத்­து­வப் பொருட்­க­ளின் விலை­க­ளைக் கேட்­கும் மின்­ம­டல்­கள் அவை.

விலை­கள் ஏற்­கப்­பட்டு, வியா­பார உடன்­பாடு ஏற்­பட்­ட­தும் கொள்­மு­தல் ஆைணையை (பிஓ) சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு அவர்­கள் அனுப்­பு­வார்­கள். பொருட்­களை வாங்­கு­தற்­கான தொகை எது­வும் அனுப்­பப்­ப­டாது.

இந்த மோச­டியை விசா­ரிக்­கத் தொடங்­கிய அதி­கா­ரி­கள் பொருட்­கள் விநி­யோ­கிக்­கப்­படும் முக­வ­ரி­கள் மோச­டிக்­கா­ரர்­கள் சம்­பந்­தப்­பட்ட சரக்கு அனுப்­பும் நிறு­வ­னங்­கள் என கண்­ட­றி­யப்­பட்­டது.

பிரிட்­டன், நைஜீ­ரியா போன்ற நாடு­களுக்கு பொருட்­களை அனுப்­பக்­கூ­டி­யவை அவை.

இது­போன்ற மோச­டி­க­ளின் தொடர்­பில் பொது­மக்­கள் விழிப்­பு­டன் செயல்­பட வேண்­டும் என்று போலிஸ் பேச்­சா­ளர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

வியா­பா­ரம் தொடர்­பில் வரும் மின்­ம­டல்­கள் மீது சந்­தே­கம் எழுந்­தால் அவற்­றின் அதி­கா­ரத்­துவ ‘டொமைன்’ பெயரை சரி­பார்க்­கு­மாறு போலிஸ் வலி­யு­றுத்­து­கிறது.

மோச­டிக்­கா­ரர்­கள் அர­சாங்க அமைப்­பு­கள் மற்­றும் உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளைப் போல தோன்­றும் போலி ‘டொமைன்’ பெயர்க­ளைப் பயன்­ப­டுத்­து­வர்.

உதா­ர­ணத்­திற்கு, procurement@moegovt-sg.com மற்­றும் purchasing @nus-edu.org போன்­ற­வாறு அவை இருக்­கும். இவை போலி­யா­னவை.

விசா­ரிப்­பு­க­ளின் உண்­மைத்­தன்­மையை வியா­பார, வர்த்­தக நிறு­வ­னங்­கள் சோதித்து அறி­ய­வேண்­டும்.

மேலும், மின்­ம­டல் முக­வ­ரிக்­குப் பதி­ல­ளிப்­ப­தை­விட, சம்­பந்­தப்­பட்ட அரசு அமைப்­பு­க­ளின் அதி­கா­ரத்­துவ எண்­களில் அத்­த­கைய விசா­ரிப்­பு­களை உறுதி செய்­து­கொள்ள வேண்­டும்.

மேலும் மின்­ம­டல் முக­வ­ரி­களில் சின்­னச் சின்ன இலக்­க­ணப் பிழை­களும் எழுத்­துப் பிழை­களும் இருப்­பதை உற்­று கவ­னித்­தால் தெரி­யும்.

பொருட்­களை விநி­யோ­கிக்க தரப்­பட்டு இருக்­கும் தனி­யார் வீடு­கள், சரக்கு அனுப்­பும் நிறு­வ­னங்­கள் அல்­லது சரக்கு சேமிப்­புக் கிடங்­கு­கள் ஆகி­ய­வற்­றின் முக­வ­ரியை சரி­பார்ப்­ப­தும் அவ­சி­யம் என்­றும் போலி­சார் தெரி­வித்து உள்­ள­னர்.

மோசடி தொடர்­பான விழிப்­பு­நிலை தக­வல்­க­ளைப் பெற www.scamalert.sg என்­னும் இணை­யப் பக்­கத்­தையோ 1800-722-6688 என்­னும் மோச­டித் தடுப்பு நேரடி தொலை­பேசி எண்­ணையோ பயன்­ப­டுத்­து­மாறு பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ள­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!