டெங்கி சம்பவங்கள் குறைந்தாலும் கொசுப் பெருக்கம் நீடிப்பு

சிங­கப்­பூ­ரில் டெங்­கிச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து ஏழா­வது வார­மா­கக் குறைந்து வந்­த­போ­தி­லும் கொசுக்­க­ளின் பெருக்­கம் இன்­னும் கட்­டுக்­க­டங்­க­வில்லை என தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்துள்­ளது. எனவே பொது­மக்­கள் தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்­கு­மாறு அது வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

கடந்த வாரம் 593 டெங்­கிச் சம்­ப­வங்­கள் பாதி­வா­யின. அது அதற்கு முந்­திய வாரத்­தைக் காட்­டி­லும் சுமார் 11 விழுக்­காடு குறைவு. மேலும், ஏழு வாரங்­க­ளுக்கு முன்பு இருந்­த­தைக் காட்­டி­லும் 56 விழுக்­காடு சரிவு அந்த விகி­தம்.

நிலைமை மேம்­பட்­டி­ருந்­தா­லும் கடந்த மூன்று வாரங்­க­ளாக குடி­யி­ருப்பு வட்­ட­ரங்­க­ளில் கொசுக்­கள் எண்­ணிக்கை 12 விழுக்­காடு அதி­க­ரித்து உள்­ள­தாக வாரி­யம் குறிப்­பிட்டு உள்­ளது.

“வாராந்­திர டெங்­கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறை­வாகி வந்­தா­லும் ஒட்­டு­மொத்த சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதி­கம். மேலும் ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தால் டெங்­கிச் சம்­ப­வங்­கள் இனி­ஒரு­முறை ஏற்­றம் காணும் வாய்ப்­பு­கள் அதி­கம்,” என்­றது வாரி­யம்.

ஆண்­டு­தோ­றும் மே மாதம் முதல் அக்­டோ­பர் மாதம் வரை டெங்­கிப் பரு­வம் உச்­சத்­தில் இருக்­கும் என்­ப­தால் இன்­னும் விழிப்­பு­டன் இருக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது.

இவ்­வா­ரம் செவ்­வாய்க்­கி­ழமை வரை 195 டெங்­கிக் குழு­மங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. முந்­திய வாரத்­தைக் காட்­டி­லும் இது 11 குறைவு. இவ்­வாண்­டில் 2,543 டெங்­கிக் குழு­மங்­கள் கண்­ட­றி­யப்­பட்டு அவற்­றில் 2,348 குழு­மங்­கள், அதா­வது 92 விழுக்­காடு மூடப்­பட்­டு­விட்­டன. இருப்பினும் அருணாசலம் செட்டி ரோடு, கிம் யாம் ரோடு, அல்ஜுனிட் ரோடு, கேலாங் ரோடு, குலிமார்ட் ரோடு, அங் மோ கியோ அவென்யூ 2, ஈஸ்ட் கோஸ்ட் ரோடு, ஜாலான் பைடுரி, பிடோக் நார்த் அவென்யூ 1 ஆகிய வட்டாரங்களில் பெரிய டெங்கிக் குழுமங்கள் உண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!