செங்காங் சட்டவிரோத ஒன்றுகூடல்: மேலும் இருவருக்கு தலா $2,000 அபராதம்

கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்த கால­கட்­ட­மான கடந்த மே மாதத்­தில் சட்­டத்­திற்­குப் புறம்­பாக செங்­காங்­கில் உள்ள வீவக வீடு ஒன்­றில் ஒன்­று­கூ­டி­ய­தாக தொட­ரப்­பட்ட வழக்­கில் நேற்று இரு­வ­ருக்கு தலா $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

மோய் காய் யி, 19, கவின் லியோவ் ஜுன் ரோங், 20, ஆகிய இரு­வ­ருக்­கும் நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­பில் இருக்க நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. ஆனால் இவர்­கள் இரு­வ­ரும் அந்­தத் தண்­ட­னைக்­குப் பதி­லாக அப­ரா­தம் செலுத்­து­வதை தேர்­வு­செய்­துள்­ள­னர்.

இன்­னோர் இளை­ஞ­ரான தான்ட் தாவ் காங், 19, என்­ப­வ­ருக்கு நீதி­மன்­றம் ஒன்­பது மாத நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­பில் இருக்க உத்­த­ர­விட்­டுள்­ளது. இவ்­வ­கை­யில் இவர் 40 மணி நேர சமூக சேவை­யில் ஈடு­பட வேண்­டும். இந்த இளை­ஞர் நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­பில் இருப்­பதை உறு­தி­செய்­யும் வகை­யில் அவ­ரது பெற்­றோர் பிணை­த்தொகை $5,000 செலுத்­தி­யுள்­ள­னர்.

நேற்று அப­ரா­தம் விதிக்­கப்­பட்ட இந்த மூன்று பேரும் செங்­காங், புளோக் 295சி காம்­பஸ்­வேல் கிர­செண்ட் முக­வ­ரி­யில் 18 பேர் சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்­று­கூ­டி­ய­வர்­களில் அடங்­கு­வர். இந்த சட்­ட­வி­ரோத ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சியை நடத்­திய இரு­வர் உள்­ளிட்ட 12 பேருக்கு முன்­ன­தாக அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

செப்­டம்­பர் 11ஆம் தேதி, வீட்டு உரி­மை­யா­ள­ரான லியோங் சீ முன், 37, என்­ப­வ­ருக்­கும் நிகழ்ச்­சியை நடத்­தி­ய­வ­ரும் லியோங்­கின் முன்­னாள் காத­லி­யு­மான கேசி ஓங் ‌ஷி ஹோங், 32, என்­ப­வ­ருக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி $4,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அந்த ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சி­யில் விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட 21 வயது முதல் 32 வயது வரை­யி­லான 10 பேருக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தலா $2,500 முதல் $3,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்ட தற்­கா­லிக சட்­டத்­தின்­படி சாற்றப்­பட்ட குற்­றங்­களை 15 பேரும் ஒப்­புக் கொண்­ட­னர்.

நோய் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்த கால­கட்­ட­மான ஏப்­ரல் 7 முதல் ஜூன் 1 வரை சிங்­கப்­பூ­ரர்­கள் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்கு மட்­டுமே வெளி­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­னர் மற்­ற­படி தங்­க­ளின் வீட்டை விட்டு வெளி­யே­றவோ பிற­ரைச் சென்று சந்­திக்­கவோ அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இந்­தச் சட்­டத்தை மீறி மே 8ஆம் தேதி காலை 6 மணிக்கு செங்­காங்­கில் உள்ள லியோங்­கின் வீட்­டிற்கு இரண்டு விருந்­தி­னர்­கள் வருகை தந்­த­தோடு அங்கு காலை உணவை உண்­ட­னர். அவர்களைத் தொடர்ந்து அன்­றி­ரவு 9 மணிக்கு மற்ற விருந்­தி­னர்­கள் அந்த வீட்­டிற்கு வருகை தந்­த­னர். இது குறித்து அண்டை வீட்­டார் மே 9ஆம் தேதி அதி­காலை 2 மணிக்கு போலி­சுக்­குத் தக­வல் தெரி­வித்­த­னர். அதை­ய­டுத்து அங்கு போலிஸ் அதி­காரி சார்­ஜண்ட் ராய் டான் அந்த வீட்­டிற்­குச் சென்று அழைப்பு மணியை அழுத்­தி­னார். ஆனால் வீட்­டிற்­குள் இருந்­த­வர்­கள் கத­வைத் திறக்­க­வில்லை.

பின்­னர் கதவை பல­முறை தட்­டி­ய­பின் வீட்­டுக்­குச் சொந்­தக்­கா­ர­ரான லியோங் மட்­டும் குரல் கொடுத்­தார். தூங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­ய­தும், வீட்­டிற்­குள் நீங்­கள் போடும் சத்­தம் வெளி­யில் கேட்­கிறது என்­றார் போலிஸ் அதி­காரி.

அத­னை­ய­டுத்து லியோங், தங்­கள் வீட்­டில் ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டதை ஒத்துக்கொண்டார். உள்ளே சென்று சோத­னை­யிட்ட போலி­சார் அங்கு ஏரா­ள­மா­னோர் ஒன்­று­கூ­டி­யி­ருந்­ததைக் கண்டனர்.

இந்த வழக்கில் ஜேஸ்பர் டான் ‌ஷி ஹோங், 25, மண்டி டான் யி ஸிங், 26, சுவா ஜி குன், 29, ஆகிய மூன்று பேரின் வழக்கு நிலுவையில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!