‘வாட்ஸ்அப்’ மூலம் பெண் போலிஸ் அதிகாரிக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய ஆடவருக்கு $3,000 அபராதம்

பெண் போலி­சுக்கு ஆபா­சப் படங்­களை அனுப்­பிய 34 வயது ஆட­வ­ருக்கு நேற்று நீதி­மன்­றத்­தில் $3,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

போக்­கு­வ­ரத்து குற்­றம் தொடர்­பில் வாட்ஸ்­அப் வழி­யாக போலிஸ் அனுப்­பிய தக­வ­லுக்கு பதிலளித்த முகம்­மது இத்­ரிஸ் கைரு­தின் என்­னும் அந்த சிங்­கப்­பூ­ரர், நீங்­கள் போக்­கு­வ­ரத்து போலி­சாக இருந்­தால் அதற்­கென்ன,” என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கடந்த மே 29ஆம் தேதி இத்­ரி­ஸுக்கு போக்­கு­வ­ரத்து போலிஸ் ஆய்­வா­ள­ரான அந்­தப் பெண் ஒரு நினை­வூட்­டல் அனுப்பி இருந்­தார்.

போக்­கு­வ­ரத்­துக் குற்­றங்­க­ளுக்­குச் செலுத்தவேண்­டிய அப­ரா­தத் தொகையை உரிய காலத்­திற்­குள் செலுத்­துமாறு கூறியது அத்தக­வல். அைவ எத்­த­கைய குற்­றங்­கள் என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­க­வில்லை. அந்­தத் தக­வ­லுக்­குப் பின்­னி­ர­வில் பதி­ல­ளித்த இத்­ரிஸ் அடை­யா­ளம் தெரி­யாத பெண்­ணின் பாவா­டைக்­குள் எடுக்­கப்­பட்ட இரண்டு படங்­களை சேர்த்து அனுப்­பி­னார்.

அத­னைத் தொடர்ந்து ஜூன் 3ஆம் தேதி செங்­காங் அக்­கம்­பக்க காவல் நிலை­யத்­தில் அந்­தப் பெண் போலிஸ் அதி­காரி புகார் அளித்­தார். விசா­ர­ணை­யில் இறங்­கிய போலி­சார் அன்று இரவே இத்­ரிஸை ஜூரோங் வெஸ்ட் ஸ்தி­ரீட் 65ல் உள்ள புளோக் 670ஏ-ல் கைது செய்­த­னர். அவ­ரி­ட­மி­ருந்த கைபேசி பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­து.

கட­மை­யில் ஈடு­பட்டு இருக்­கும் அர­சாங்க ஊழி­யர்­களை துன்­பு­றுத்­தும் எந்­த­வொரு செய­லை­யும் சகித்­துக்­கொள்ள இய­லாது என்றும் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என்றும் போலிஸ் தனது அறிக்­கை­ யில் கூறியுள்ளது. துன்­பு­றுத்­தல் குற்­றத்துக்கு தண்டனை ஓராண்டு வரை­யி­லான சிறை, $5,000 வரை­யி­லான அப­ரா­தம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!