சுடச் சுடச் செய்திகள்

'எதிர்காலத்துக்கு மின்னிலக்க திறன் மட்டும் போதாது'

எதிர்காலத்துக்குத் தயாராகும் சிங்கப்பூரர்கள் மின்னிலக்கத் திறன்களை மட்டும் நம்பியிருந்தால் போதாது. இவ்வாறு சொன்ன பொருளியல் வளர்ச்சிக் கழக நிர்வாக அதிகாரி சிங் காய் ஃபோங், பொதுவாக மக்கள் கொண்டிருக்கும் மேலும் இரு நம்பிக்கைகளையும் நடைமுறைக்கு ஒத்துவராத கற்பனை என்று வர்ணித்துள்ளார்.

சிங்கப்பூரில் தென்படக்கூடிய வாய்ப்புகளை மட்டும் நம்பியிருப்பது, நீண்டகால வாழ்க்கைத் தொழில் திட்டங்களை இப்பொழுதே வகுப்பது போன்ற மற்ற இரண்டு நம்பிக்கைகளையும் அவர் தவறு எனக் கூறியுள்ளார். இதன் தொடர்பில் பேசிய அவர், தரவுகளைப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது, அதைச் சரியான முறையில் நிரலிடுவது போன்ற திறன்கள் இருந்தால் போதுமானது எனப் பலர் நினைப்பதைச் சுட்டினார்.

“அவை முக்கியமல்ல என நான் சொல்ல வரவில்லை. ஆனால், அவை மட்டுமே போதுமானதல்ல, ஏனெனில், இதில் பெரும்பாலானவை காலப்போக்கில் தானியக்க முைறயில் செயல்படப் போகின்றன,” என்று விவரித்தார். நிகழ்வுகளைக் கோர்வையாக கதைபோல் சொல்வது, மற்றவரிடம் அனுதாபம் கொள்வது, தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது ேபான்ற மென் திறன்கள் முக்கியமானவை, இவையே மக்களைத் தனித்துவமாக எடுத்துக் காட்டும் என்று விளக்கினார்.

“இங்கு என்ன நடக்கிறது, தங்களுக்கு ஓர் எளிமையான வேலை கிடைத்தால் போதுமானது என்ற சிந்தனையில் மக்கள் கவனம் செலுத்துவது எனக்குக் கவலையளிக்கிறது.

“இதுபோன்ற சிந்தனையில் ஒருவர் இருந்தால், காலம் செல்லச் செல்ல, உலகெங்கும் போட்டித்தன்மை அதிகரித்து வருவதால், பலவிதமான நெருக்கடிகளுக்கு நீங்கள் ஆளாவீர்கள். மனித இயந்திரங்கள், தொழில்நுட்பம் போன்றவற்றால் போட்டித்தன்மை ஏற்படும்.

“ஆசியா வளர்ந்து வருகிறது. ஆசியாவிலும் உலகிலும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள சிங்கப்பூரர்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

நீண்டகால திட்டம் வகுப்பதில் வல்லவர்களான சிங்கப்பூரர்கள் பற்றிக் குறிப்பிட்ட திரு சிங், “நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் ஏற்கெனவே திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுவிட்டது போல, உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பது, ஒரு வேலையைத் தேடிக் ெகாள்வது என்ற சிந்தனையில் இருக்கிறோம்,” என்று கூறினார்.

வாழ்க்கை என்பது இதுபோல் ஒரு நேர்கோடு அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார். சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு குறுகியகால திட்டங்கள் வகுப்பது முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் தாங்கள் நீண்ட நாட்களாகக் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கும் விருப்பங்களைக் கைவிடாமல் பின்பற்றி தங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon