மூத்த குடிமக்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம்

மூத்த குடிமக்களைச் சென்றடையும் முயற்சிகளை மூத்தோர் நிலையம் (சிஎஃப்எஸ்) தீவிரப்படுத்தி வருவதை அடுத்து ஃபாஸ்ட்ஜாப்ஸ் நிறுவனத்துடன் தற்போது கைகோத்துள்ளது.

வேலை தேடுதலுக்கான கைபேசி செயலி நிறுவனம் ‘ஃபாஸ்ட்ஜாப்ஸ்’.

முதுமையிலும் வேலை தேட விரும்புவோருக்காக பொருத்தமான வேலையைத் தேடித் தருவதில் இரு நிறுவனங்களும் இணைந்துள்ள நிலையில் ‘சில்வர்ஜாப்ஸ்’ வேலை தேடுதல் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலை-வாழ்க்கை மாற்றங்களுக்கான கலந்துரையாடல்கள் மற்றும் வேலை தேடுதலில் மூத்தோர் தொடர்பான விவகாரங்கள் ஆகியவற்றை ‘சிஎஃப்எஸ்’ தன் சமூகக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

மூத்த குடிமக்களை வேலைப் பயற்சிகளுக்கு அனுப்புவது, அவர்களைப் பொருத்தமான வேலைகளில் அமர்த்துவது போன்றவற்றிற்கு ஆதரவாக ‘சில்வர்ஜாப்ஸ்’ திட்டம் அமைந்திடும்.

வேலைக்கு ஆள் எடுப்பதில் வயது வரம்பு இல்லாததை திட்டம் ஊக்குவிப்பதுடன் மூத்தோர் தங்களின் அனுபவம், நிபுணத்துவம் ஆகியவற்றையும் தளத்தில் குறிப்பிடலாம்.

இதனால் மூத்த குடிமக்களின் வயதைத் தவிர்த்துவிட்டு அவர்களின் வேலைத் தகுதியை ஒட்டி முதலாளிகள் அவர்களை நியமிப்பார்கள்.

இவ்வாண்டு ஜூலை மாதம் தொடங்கிய இத்திட்டத்தின் கீழ் இதுவரை 171க்கும் மேற்பட்ட முதலாளிகள் 469க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விளம்பரம் செய்துள்ளனர்.

இத்திட்டத்திற்கு ‘டோட் பார்ட்’ மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு ஆதரவு வழங்குகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!