சிங்கப்பூரில் மகிழ்உலா கப்பல் பயணங்கள் தொடங்க தயார்

சிங்கப்பூரில் மகிழ்உலா கப்பல் பயணங்கள் தொடங்க தயார்

1 mins read
5cff949a-f472-4c8a-a138-e4b4ea3b261e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உல்லாசப் பயணத்துக்கான முதல் படியாக மகிழ்உலா கப்பல் பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் சுகாதார மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பு ஒன்றை சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகம் உருவாக்கி வருகிறது.

கொரோனா கிருமித்தொற்று சூழல் கருதி இவ்வாண்டு மார்ச் 13 முதல் சிங்கப்பூர் துறைமுகங்களில் சொகுசுக் கப்பல்கள் ஒதுங்க அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து உல்லாசக் கப்பல்கள் கிளம்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இருப்பினும், முதல் மூன்று மாதங்களுக்கு அதிகபட்சமாக 50% பலத்தில் மட்டுமே கப்பல்கள் இயங்க முடியும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே இத்திட்டத்தைத் தொடங்கவுள்ள காலகட்டம் குறித்துத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இத்தகைய திட்டத்திற்குத் தயாராகும் வகையில் உல்லாசக் கப்பல் சான்றிதழ் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தூய்மைத் தரநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப இது திட்டமிடப்படும்.